ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேம்பா பிராண்ட் குளிர்பானங்கள் மூலம் இச்சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது, குறிப்பாக வெளிநாட்டு நாட்டு நிறுவனங்களான பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
Recommended Video
பொதுவாக முகேஷ் அம்பானி புதிதாக ஒரு தொழிலில் இறங்கும் போது விலை போரை உருவாக்க விரும்புவார் அந்த வகையில் CAMPA பிராண்ட் குளிர்பானங்களை சக போட்டி நிறுவனங்களை காட்டிலும் 30 சதவீத குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இதனால் பெப்சி, கோகோ கோலாவும் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் தான் முகேஷ் அம்பானிக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது, CAMPA பிராண்ட் குளிர்பானத்தை அறிமுகம் செய்து வெற்றியை சுவைக்க துவங்கிய நிலையில் இந்தியா சந்தை முழுவதுக்கும் போதுமான குளிர்பானத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை, இதேபோல் நாட்டின் பல பகுதிகளில் குளிர்பானங்களை சப்ளை மற்றும் டிஸ்ட்ரிபூஷன் செய்ய முடியவில்லை.
இந்த பிரச்சனைகளை ஒரே டீலில் தீர்க்க வேண்டும் என்பதற்காக தான் Reliance Consumer Products (RCPL) நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Kali Aerated Water Works நிறுவனத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை துவங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் Bovonto, காலிமார்க் சோடா ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனம் தான் Kali Aerated Water Works. ரிலையன்ஸ் காளி நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்க கடந்த ஆண்டு பேச்சுவார்த்சை நடந்தது, ஆனால் தற்போது உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இக்கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் Kali Aerated Water Works நிறுவனத்திற்கு சொந்தமான 8 தொழிற்சாலையில் கேம்பா பிராண்ட் குளிர்பானத்தை தயாரிக்கவும், இந்த நிறுவனத்தின் வாயிலாக தென்னிந்தியாவில் டிஸ்ட்ரிபியூஷன் செய்யவும் முடியும்.
இதவேளையில் Kali Aerated Water Works தனது முக்கியமான குளிர்பானமான Bovonto, காளிமார்க் சோடா, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ஜூஸ், இளநீர் ஆகியவையும் தொடர்ந்து தயாரித்து விற்க உள்ளது. காளிமார்க் நிறுவனம் தமிழ்நாடு, ஆந்திராவில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை கொண்டு உள்ளது.

1916ல் பழனியப்பா நாடார் அவர்களால் துவங்கப்பட்ட காளி குளிர்பான நிறுவனத்தை தற்போது 4வது தலைமுறை நிர்வாகம் செய்து வருகிறது, இந்நிறுவனத்தில் சுமார் 1000 பேர் பணியாற்றி வருகின்றனர். ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் Kali Aerated Water Works நிறுவனத்தில் பங்குகள் வாங்குவது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ரிலையன்ஸ் காளி நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது, இது வெற்றி அடையாத பட்சத்தில் தற்போது உற்பத்தி மற்றும் டிஸ்ட்ரிபியூஷன்-க்கு கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் ரிலையன்ஸ் CAMPA-வுக்காக தமிழ்நாட்டில் CAMP போட்டுவிடாலம்.


Click it and Unblock the Notifications