சென்னை டூ வெள்ளை மாளிகை.. யாருப்பா இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.. மிடில் கிளாஸ் பையனின் அசுர வளர்ச்சி..!!

தமிழகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Andreessen Horowitz-ன் ஜெனரல் பார்ட்னராக வலம் வரும் ஸ்ரீராம் கிருஷ்ணனின் பயணத்தில் முக்கிய படியாக வெள்ளை மாளிகைக்குள் நுழைய உள்ளார். இவருடைய பயணம் பல இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் PayPal இன் முன்னாள் COO டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

சென்னை டூ வெள்ளை மாளிகை.. யாருப்பா இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.. மிடில் கிளாஸ் பையனின் அசுர வளர்ச்சி..!!

ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க அரசின் AI தொடர்பான கொள்கையை வடிவமைத்து ஒருங்கிணைப்பார் என்று டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ள அவரின் பயணம் எப்படி, எங்கே துவங்கியது தெரியுமா..?

சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம், தனது தந்தையின் காப்பீட்டுத் துறை வேலை மற்றும் தாயின் இல்லத்தரசி வாழ்க்கை எனும் கோடிக்கணக்கான சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். தற்போது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

சென்னை SRM பொறியியல் கல்லூரியில் பிடெக் (IT) படிப்பை முடித்த இவர், வெறும் 21 வயதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் சென்னையில் இருந்து சியாட்டில் நகரில் பணியாற்ற அமெரிக்கா புறப்பட்டார். இந்த பயணம் தான் தற்போது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி வரையில் அவரை அழைத்துச் சென்றுள்ளது.

மைக்ரோசாஃப்ட்டில் 6.5 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், பேஸ்புக், ஸ்னாப்சாட், ட்விட்டர் போன்ற புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் பணியாற்றினார். இவர் ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப் நிறுவனங்களில் மொபைல் விளம்பர ப்ராடெக்ட்கைளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப உலகில் பல ஆண்டுகள் பயணித்த பிறகு, ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது கவனத்தை முதலீடு மற்றும் கன்சல்டன்சி துறைக்கு மாற்றினார். SpaceX போன்ற அமெரிக்க நிறுவனங்கள் முதல் CRED, Khatabook போன்ற இந்திய நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் 23-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களில் இவர் முதலீடு செய்துள்ளார்.

தற்போது, அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான Andreessen Horowitz-ல் ஜெனரல் பார்ட்னராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஒரு இந்தியராகவும், குறிப்பாக ஒரு தமிழனாகவும், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில், அமெரிக்க அரசியல் வட்டத்தில் எந்த அளவு உயரத்தை அடைய முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைகிறது.

ஸ்ரீராம் கிருஷ்ணன் பெயர் உலகளவில் டிரெண்டாக மிக முக்கியமான காரணமாக இருந்தது அவருடைய டிவிட்டர் பணி தான். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனத்தில் முக்கியமான ஒன்று Andreessen Horowitz. இதன் வாயிலாகவே எலான் மஸ்க் - ஸ்ரீராம் கிருஷ்ணன் மத்தியிலான நட்பு மலர்ந்தது.

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு அவர் மொத்த நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன். இது தான் ஸ்ரீராம் கிருஷ்ணன் டெக் உலகை தாண்டி வெளியுலகத்திற்கும் தெரிய முக்கிய காரணமாக இருந்தது.

இதே வேளையில் 2021ல் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திய The Aarthi and Sriram Show என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சி டெக் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+