சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது வகையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் பல ஸ்பெஷலான விஷயங்கள் உள்ளது.

சென்னை-கோவை இடையில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெறும் 5 மணி நேரம் மற்றும் 50 நிமிட பயண நேரம் கொண்ட ரயிலாகும். மேலும் தமிழ்நாட்டின் இரு முக்கிய வர்த்தக நகரமான சென்னை-கோவை இடையில் இயங்கும் வேகமான ரயில் இதுவாகும். இப்புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிற எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் இது ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான பயண நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னை-கோவை இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார். இந்தியாவில் ரயில் போக்குவரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு வர மத்திய அரசின் பல முக்கியமான முயற்சிகளில் வந்தே பாரத் ரயில் முக்கியமானது.
இந்தியாவில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் மற்ற வந்தே பாரத் ரயில்களைப் போலல்லாமல் சென்னை-கோவை வழித்தடத்தில் உள்ள வந்தே பாரத் ரயில்கள் எட்டு பெட்டிகள் மட்டுமே கொண்டவை, ஆனால் மற்ற வந்தே பாரத் ரயில்களிலும் 16 பெட்டிகள் உள்ளன. இந்த சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில், ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் மற்றும் 530 பயணிகள் பயணிக்கும் வசதிகள் கொண்டவை.

இந்த 8-பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் முக்கியமான வளர்ச்சி திட்டமாகும், பல இடத்தில் வந்தே பாரத் ரயில்களில் போதுமான பயணிகள் இல்லாமல் இயங்க வேண்டிய நிலையை மாற்றும் வகையில் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு இயக்கப்படும் புதிய திட்டம் சென்னை - கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு உள்ளது.
இந்த செமி ஹைய் ஸ்பீடு ரயில்கள் சென்னை - கோவை நகரங்களுக்கு இடையேயான 495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கும். வந்தே பாரத் ரயில் கோவையில் துவங்கி திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகியவை நிறுத்தப்படுகின்றன. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12:10 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த பயண வழியில், கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும், 6:35 மணிக்கு திருப்பூர் வந்து 6:37 மணிக்கு புறப்படும், இதை தொடர்ந்து 7:12 மணிக்கு ஈரோடு வந்து 7:15 மணிக்கு புறப்படும். அடுத்ததாக காலை 7:58 மணிக்கு சேலத்தை அடைந்து 8 மணிக்கு புறப்படும். அதன் பின் சென்னைக்கு மதியம் 12:10 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னையில் இருந்து திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும். இதற்கிடையில் மாலை 5:48 மணிக்கு சேலத்தை அடைந்து 5:50 மணிக்கு புறப்படும். இதன் பின்பு 6:32 மணிக்கு ஈரோடு வந்து 6:35 மணிக்கு புறப்படும், மேலும் இரவு 7:13 மணிக்கு திருப்பூரை அடைந்து 7:15 மணிக்கு புறப்படும் இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
#WATCH | Prime Minister Narendra Modi flags off Chennai-Coimbatore Vande Bharat Express in Chennai, Tamil Nadu
— ANI (@ANI) April 8, 2023
(Source: DD News) pic.twitter.com/YiZetP3FoQ
புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் சென்னை - கோவை இடையே இயங்கும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் முன்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது கிட்டத்தட்ட 6 மணி நேர பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் 1,057 ரூபாய் முதல் 2,310 ரூபாய் வரையில் உள்ளது.


Click it and Unblock the Notifications