தொழிலாளர்களின் உழைப்பை பயன்படுத்திக்கொண்டு அவர்களை சுரண்டும் நிறுவனங்கள் மீது புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு வெகுமதி அளிக்கும் வகையில் பல்வேறு கிப்ட்-களை வழங்கியுள்ளது. அதற்காக "Sharing is Caring" என்ற ஈவன்டை, டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் நடத்தியது. இந்த நிறுவனத்தின் நிறுவனரான கண்ணன் தனது ஊழியர்களுக்கு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.
நாட்டின் முன்னணி ஸ்டீல் வடிவமைப்பு நிறுவனமான டீம் டீடெய்லிங் சொல்யூஷன்ஸ் 6 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான ஊக்கத்தொகை, 10 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான ஊக்கத்தொகை, திருமணத்திற்கான ஊக்கத்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் ஊழியர்களின் திருப்தியில் கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த நிகழ்வு, நிறுவனத்தின் ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து பாராட்டும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நிறுவனத்தின் வெற்றியை ஊக்குவிப்பதில் அவர்களின் அயராது உழைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் ஊழியர்கள் எங்களின் மிகப்பெரிய சொத்தாக நாங்கள் நம்புகிறோம் என்று கண்ணன் கூறினார்.
ஒவ்வொரு ஊழியர்களின் செயல் திறன், அவர்களுடைய பதவிக்காலம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்புகள் போன்ற காரணங்களை கருத்தில் கொண்ட இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்கள் மேலும் அவர்களின் சாதனையை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
நிறுவனம் தனது ஊழியர்களின் திருப்தியை வலுப்படுத்த விரும்புகிறது, நிறுவனத்தின் உறுதிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற பரிசுகள் ஊழியர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க நாங்கள் பெருமைப்பட்டுள்ளோம். நாங்கள் தொடர்ந்து ஊழியர்களின் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளரின் திருப்தியில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை போலவே இதற்கு முன்பும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறனை அங்கீகரித்து பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் சூரத்தில் இருக்கும் பணக்காரரான சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா 2018-ஆம் ஆண்டில் தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்-ஆக 600 கார்களை பரிசளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல 2016-ஆம் ஆண்டில் சாவ்ஜி தன்ஜி தோலாக்கியா தீபாவளி போனஸ்-ஆக 400 பிளாட்டுகள் மற்றும் 1260 கார்களை வழங்கினார். இதுவும் அப்போது பிரபலமாக பேசப்பட்டது.


Click it and Unblock the Notifications