40 வருடம் 4 பெயர்கள்.. மூடப்பட்ட சென்னை கிரவுன் பிளாசா.. பாஷ்யம் குழுமத்தின் மெகா திட்டம்..!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த கிரவுன் பிளாசா சுமார் 38 வருடங்களாக மக்கள் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த நிலையில் டிசம்பர் 20 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க முடியாது என அறிவித்ததோடு, ஹோட்டல் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதாகத் தெரிவித்து. மேலும் சென்னை கிரவுன் பிளாசா நிர்வாகம் இந்த இடத்தில் புதிய திட்டத்தைத் தீட்டி இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஈமெயில் மூலம் அறிவித்துள்ளது.

சென்னை கிரவுன் பிளாசா-வின் 38 வருட வரலாற்றில் ஹாலிடே இன் மெட்ராஸ் ஆகத் துவங்கி, அடையார் பார்க், பார்க் ஷெரட்டன், கடைசியாகக் கிரவுன் பிளாசா என 4 பெயர்களைப் பெற்றுள்ளது. 90களில் வந்த தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அதிகளவில் காணப்படும் ஹோட்டல்களில் இது முக்கியப் பங்கு வகித்தது.

40 வருடம் 4 பெயர்கள்.. மூடப்பட்ட சென்னை கிரவுன் பிளாசா.. பாஷ்யம் குழுமத்தின் மெகா திட்டம்..!

கிரவுன் பிளாசா ஹோட்டலின் பிரம்மாண்ட வீயூவ் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது போலவே, இந்த ஹோட்டலில் இருக்கும் தக்ஷன் உணவகம் சென்னை மக்களுக்குப் பிடித்த உணவகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிரவுன் பிளாசா இடத்தைத் தற்போது சென்னையின் பிரபலமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் கைப்பற்றியுள்ளது.

டிடிகே சாலையில் அமைந்துள்ள இந்தக் கிரவுன் பிளாசா ஹோட்டல் பகுதியில் ஆடம்பர அப்பார்ட்மென்ட்-ஐ கட்ட பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவின் பெற பெரு நகரங்களைப் போல் சென்னையிலும் தற்போது ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் ஆடம்பர வீடுகளைக் கட்ட முடிவு செய்துள்ளது.

பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் இந்த இடத்தில் 2 அப்பார்ட்மென்ட் டவர்களைக் கட்டப்பட உள்ளது, இதில் ஒன்று 34 மாடி கட்டிடமாக இருக்கக் கூடும். மேலும் கிரவுன் பிளாசா ஹோட்டலின் முக்கிய அடையாளமாக இருந்த தக்சின் ரெஸ்டாரென்ட் அப்பராட்மென்ட்-ன் தரை தளத்தில் இருக்கும், இதோடு கீழ் தளத்தில் ரீடைல் கடைகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடப்படும் வேளையில் ஓசூர் மற்றும் சென்னையில் பார்சூன் ஹோட்டல் நிறுவனம் சுமார் 100 அறைகள் கொண்ட ஹோட்டல்களைக் கட்ட உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 54 நகரங்களில் பார்சூன் ஹோட்டல் இயங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+