குடும்ப பொறுப்புகள், பணி அழுத்தம், வேலைப்பளு, பதவி உயர்வு பெற வேண்டும் , சம்பள உயர்வு பெற வேண்டும் என வேலைக்கு செல்பவர்கள் ஆகட்டும் அல்லது சொந்தமாக தொழில் புரிபவர்களாகட்டும் இந்த காலத்தில் அனைவருமே பல அழுத்தங்களுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம். இந்த மன அழுத்தங்களில் இருந்து நம்மை விடுவிக்க ஒரு கனிவான வார்த்தையும் விசாரிப்பும் போதும். அது தான் சென்னையை சேர்ந்த ஒரு தொழில்முனைவோருக்கு நிகழ்ந்துள்ளது.
பல்வேறு மன அழுத்தங்களோடு வாகனத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் டிராபிக் போலீசார் கனிவுடன் நடந்து கொண்ட நிகழ்வு கேட்போரை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த பெண் தொழில் முனைவோர் தான் ஜனனி பொற்கடி. இவர் கடந்த வாரம் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவருடைய பதிவில், "கடந்த வாரம் நான் ஒரு டிராபிக் போலீஸ் முன்பு அழுதேன் . நான் என்னுடைய காரை ஓட்டி சென்று கொண்டிருந்தேன். மிகவும் மன அழுத்தத்தோடு நான் இருந்தேன். அந்த மன அழுத்தத்தை என்னால் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியவில்லை, வேலை எதிர்பார்ப்புகள் அழுத்தங்கள் என அடுத்தடுத்த விஷயங்களை போட்டு குழம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் திடீரென டிராபிக் போலீஸ் ஒருவர் என்னை நிறுத்தினார் எதற்காக என்னை நிறுத்தினார் என்பது கூட எனக்கு ஞாபகம் இல்லை என கூறியுள்ளார்.
அப்போது அந்த டிராபிக் போலீஸ் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை உடைந்து அழ வைத்துவிட்டது என கூறியுள்ளார். அந்த டிராபிக் போலீஸ் என்னிடம் உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் நலமா? என கேட்டார். அந்த தருணம் என்னால் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை நான் உடைந்து அழுதுவிட்டேன் என தெரிவித்துள்ளார். ஒருவாரமாக என்னுள் அடங்கி வைத்திருந்த உணர்வுகள் வெளிவந்தன.
கனிவுடன் அக்கறையுடனும் அவர் என்னிடம் கேட்டது என்னை உடைந்து அழ வைத்துவிட்டது அதன் பின்னர் என்னுடைய அழுத்தங்கள் அனைத்தும் என்னை விட்டு சென்று புத்துணர்வாக நான் உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு அவர் பெயர் கூட தெரியாது, ஆனால் நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன என கூறியுள்ளார். நான் எவ்வளவு வலுவாக இருந்தாலும் சில சமயங்களில் உடைந்து அழுதுவிடுவது நல்லது என கூறியுள்ளார்.
யாராவது இப்படி உணர்வுகளோடு போராடுவதை நீங்கள் பார்த்தால் தயவு செய்து அவர்களிடம் கனிவாக பேசுங்கள், உங்களின் கனிவான ஒரு வார்த்தை அவர்கள் வாழ்க்கையையே மாற்றும் தன்மை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். நம்மிடமும் நம்மை சுற்று இருப்பவர்களிடமும் கனிவாக இருப்போம் என கூறி அந்த பதிவை முடித்துள்ளார். பலரும் அந்த டிராபிக் போலீஸின் செயலை பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications