ஆசிய பசிபிக் பகுதியில் முன்னிலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான ESR குழுமம், சென்னை ஒரகடத்தில் உள்ள தனது தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காகக் கூடுதலாக 27 ஏக்கர் நிலத்தை அதே பகுதியில் வாங்கியுள்ளது.
இந்த நிலத்தை வாங்குவதன் மூலம், விரிவாக்கம் செய்யப்பட்ட ESR ஒரகடம் தொழிற்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா தற்போது 107 ஏக்கர் பரப்பளவில் இருக்கும், இதன் மூலம் 25 லட்சம் சதுர அடி அளவிலான வளர்ச்சி கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.

ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், நிலம் வாங்குதல் உட்பட, இந்த ஒரகடம் கிடங்கு மையத்தில் புதிய கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்காக ரூ.276 கோடிக்கும் மேல் முதலீடு செய்யவுள்ளது.
ESR ஒரகடத்தின் முதல் இரண்டு கட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து கூடுதல் நிலத்தை வாங்கி விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இந்த பகுதியில் தற்போது எலக்ட்ரோமெக்கானிக்கல் தீர்வை வழங்கும் CUBIC, ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் A2Mac1, மற்றும் ஸ்பெஷாலிடி லேபிளிங் நிறுவனம் CCL உள்ளிட்ட பல முக்கிய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்த பூங்கா.
ESR குழுமம் ஆசியா-பசிபிக் சந்தையின் முன்னணி புதிய பொருளாதாரம் சந்தைகளை டார்கெட் செய்து இயக்கும் பிரபலமான ரியல் எஸ்டேட் மேலாளர் மற்றும் உலகளவில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டு மேலாளர்களில் ஒன்றாகும்.
ஈஎஸ்ஆர் இந்தியா, ஈஎஸ்ஆர் குழுமத்தின் ஒரு பகுதி. ஆசியா-பசிபிக் சந்தையில் லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி, டேட்டா சென்டர்கள், லைப் சையின்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க துறைகளுக்கான முன்னணி ரியல் எஸ்டேட் மேலாளராகும்.
ESR இந்தியா 22 தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை நிர்வகித்து வருகிறது, இதன் மொத்த சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலராகும். டிசம்பர் மாத நிலவரப்படி இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 2.8 மில்லியன் சதுர மீட்டர் மொத்த பரப்பளவு கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு பல துறையில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் பல புதிய கொள்கை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது.
இதேபோல் சென்னையில் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் தனது தயாரிப்புகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலக்குடன் முதலீடு செய்வதால் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா மிகவும் முக்கியமானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications