தமிழ்நாடு பின்டெக் துறையில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், உலக நாடுகளும் நிதிசேவை துறையின் ஹப் ஆக சென்னையை மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழ்நாடு அரசு பின்டெக் சிட்டியை உருவாக்கி வருகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் பின்டெக் சிட்டி வளாகத்தில் பின்டெக் டவர் கட்டுமானம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இந்நிவையில் பின்டெக் டவரில் நிறுவனங்கள் அலுவலகம் அமைக்க டிட்கோ அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்து அலுவலகங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசின் டிட்கோ அமைப்பு தான் இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பின்டெக் டவர் ரூ.234 கோடி செலவில் 2.29 ஏக்கர் நிலத்தில் இந்த பின்டெக் டவர் கட்டடம் உருவாகி வருகிறது.
இந்த நந்தம்பாக்கம் பின்டெக் சிட்டியும், பின்டெக் டவரும் பின்டெக் நிறுவனங்களுக்கு ஹப் ஆக செயல்படும். உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் அலுவலக இடங்கள் வழங்கும் இலக்குடன் பின்டெக் டவர் உருவாக்கப்பட்டது.
பின்டெக் டவர் மொத்தம் 5.56 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவு கொண்டது. இரு பேஸ்மென்ட், மூன்று போடியம், 12 மாடிகள் கொண்ட உயரமான கட்டடம். பேஸ்மென்ட் மற்றும் பாடியம் பகுதிகள் வாகன நிறுத்தத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கட்டடம் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜூன் 17, 2023 அன்று அடிக்கல் நாட்டினார். கட்டுமானம் விரைவாக நடந்து வரும் வேளையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது பின்டெக் துறையை வளர்க்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்பசுகிறது.


Click it and Unblock the Notifications