தமிழ்நாடு அரசு மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படப்போகும் வேளையில் எந்த மாவட்டத்திற்கு எந்த அறிவிப்பு வரும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட டைடல் பார்க், சிப்காட், விமான நிலைய விரிவாக்கம், எல்காட், சாலை மேம்பாடு, ஊரக வளர்ச்சி என அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியல் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளை தாக்கலாகும் பட்ஜெட்டிலும் பல முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என அதிகளவில் நம்பப்படுகிறது. குறிப்பாக ஸ்டாலின் அரசு புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அதிகப்படியான கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வார துவக்கத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மக்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது, ஆனால் அதைப் பலரும் கவனிக்க மறந்துவிட்டோம்.

சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி நகரங்களுக்குச் செல்லும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் மத்தியில் பயண தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். குறிப்பாக, அதிக பயணிகள் பயணம் செய்யும் பண்டிகை நேரங்களில் பெரிய அளவில் பயன் அளிக்கும்.
வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 8-லிருந்து 12-ஆக அதிகரிக்கப்படும். அதேபோல், மார்ச் 22-ஆம் தேதி முதல், சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்லும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 14-லிருந்து 16-ஆக உயர்த்தப்படும். இந்த கூடுதல் விமானச் சேவைகள் அறிவிப்புக்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பண்டிகைக் காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தாலும் பிரச்சனை தீர்ந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் சிறு நகரங்களுக்கு மத்தியிலான விமானச் சேவைகள் மேம்படுத்துவது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்குப் பயன்பெறும்.
பஸ் டிக்கெட் தான் இப்படி என்றால், ரயில் டிக்கெட்டும் எளிதில் கிடைப்பதில்லை, இப்படி கிடைத்தாலும் அதிகப்படியான கூட்ட நெரிசலில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், பெரும்பாலான மக்களுக்கு தனியார் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டிய நிலை வருகிறது. தமிழ்நாடு அரசு பண்டிகை காலத்தில் அதிகப்படியான சிறப்பு பேருந்துக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாலும் மக்களுக்கு இது போதுமானதாக இருப்பது இல்லை.
கூடுதல் விமானச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பண்டிகைக் காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் எளிதாகும். மேலும் விமான பயணங்கள் நாளுக்கு நாள் மலிவாகி வருவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்த வழிவகை செய்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications