சென்னை மழையின் ருத்ர தாண்டவம் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு உள்ளது, முதல் 2 நாள் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை எப்படியோ போராடி சமாளித்துக்கொண்டாலும் இன்று மாலையில் உணவுக்காக மக்கள் போராடி வருகின்றனர். மக்களுக்கு உதவ உணவு கொண்டு வரும் அனைத்து வாகனங்கள் முன்பும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.
பெரும்பாலான இடத்தில் செல்போன் டவர் வேலை செய்யவில்லை, ஏடிஎம் இயந்திரம் மழைநீரால் பழுதானது இதனால் மக்கள் கையில் போதுமான பணம் புழக்கம் இல்லை. இதனால் மக்கள் உணவளிக்க வரும் வாகனங்கள், உதவிக்கு வருபவர்களைச் சூழ்ந்துகொள்ளும் நிலை உள்ளது.

சென்னை பொருளாதாரத்தின் இரண்டு முக்கியமான ஆதாரம் உற்பத்தித் துறை, ஐடி துறை. அம்பத்தூர், பாடி முதல் பல தொழிற்துறை பகுதிகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு மேல் இருக்கும் காரணத்தால் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பாழாகியுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் முதல் MSME நிறுவனங்கள் வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
At last they made us beggars and snatchers. Sad that people are suffering this much. This is from Sowcarpet. Chennai. pic.twitter.com/rQleHEpp4r
— Hariharan Gajendran (@hariharannaidu) December 6, 2023
இதேவேளையில் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ஐடி பார்க் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக ஏரிக்கு அருகில் இருக்கும் டெக் பார்க் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது, 2015 ஆம் ஆண்டை போல் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் ஐடி சேவை துறை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
sholinganallur elcot back gate 🚶 pic.twitter.com/ZvNaf9EJ6b
— Sk (@skclusive) December 6, 2023
இந்த நிலையில் சென்னையின் மிக முக்கியமான ஐடி பார்க் ஆகக் கருதப்படும் சோழிங்கநல்லூர் எல்காட் ஐடி பார்க் மழை வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் அனைவரையும் பயமுறுத்துகிறது. மேலும் ஐடி நிர்வாகங்கள் இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்ட வர அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
This was the situation in shollinganallur in the morning. I was residing in elcot Avenue , kumaran nagar. Thank God I moved away 😔 pic.twitter.com/dsu4ns0fHw
— Santhosh _18_ (@Santhos60218632) December 5, 2023
இதோடு டெலிகாம் சேவைகள் சரியாக இல்லாத காரணத்தால் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர். இதனால் சென்னை நகரின் உற்பத்தி மற்றும் ஐடி சேவை துறை இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது 2 வாரமாவது ஆகும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications