சென்னையில் மிக்ஜாம் புயலால் உருவான கனமழையில் கரணமாக ஐடி பார்க் முதல் தொழிற்சாலைகள் வரையில், டெலிகாம் சேவையில் இருந்து பால் சேவையில் கடுமையாகச் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மிக்ஜாம் புயலால் கனமழை கட்டாயம் உருவாகும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டுப் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டாலும் கணிப்பை விட அதிகமாக மழை பொழிவு இருந்த காரணத்தால் எண்ணூர் முதல் வண்டலூர் வரையில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது.

இந்த நிலையில் சமுக வலைத்தளத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள், அரசின் மீதான விமர்சனங்கள், மக்களின் கருத்துகள், இக்கட்டான நிலையில் பலரும் உதவுவது, விலங்குகளைக் காப்பது எனப் பல விஷயங்கள் குறித்துப் பதிவு அனல் பறக்கிறது.
இந்த நிலையில் டிவிஎஸ் கேப்பிடல் பண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் கோபால் டிவிட்டரில் சமீபத்திய மழையில் மோசமான நகர நிர்வாகத்தின் செயல்பாடுகள் மூலம் சென்னையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் தொடர்வதற்கான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
மின்சாரம் இல்லை, இண்டர்நெட் இல்லை, டெலிகாம் சேவை இல்லை, இதனால் ஊழியர்களால் வொர்க் ப்ரம் ஹோம் செய்யச் சாத்தியமில்லை. சென்னை ஒரு பெரிய GCC மற்றும் IteS ஹப் ஆக இருக்கும் வேளையில், தொடர்ந்து சென்னை ITeS/IT துறையின் GCC ஹாப் ஆக நம்புவதற்குக் கேள்வி எழுப்புகிறது எனப் பதிவித்தார்.

இதற்கு மக்கள் பலர் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர், இதில் குறிப்பாகப் பெங்களூர் அவுட்டர் ரிங் ரோட்டில் ஒவ்வொரு வருடமும் மோசமான மழையின் காரணமாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு பெரு நகரத்திலும் உள்ளது எனப் பலரும் பதில் கொடுத்துள்ளனர்.
டிவிஎஸ் கேப்பிடல் பண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் கோபால் அவர்களின் பதிவுக்கு உங்களுடைய கருத்து என்ன..? கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications