தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறையின் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் முதல்கட்ட வெற்றி முதல்வரின் அமெரிக்க பயணத்தில் நடந்தாலும், தொழிற்சாலை செயல்படாமலேயே இருந்தது. ஆனால் தற்போது ஃபோர்டு நிர்வாகம் தனது செயல்பாடுகளை துவங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃஃபோர்டு மோட்டார், தமிழ்நாட்டின் சென்னை மறைமலைநகர் ஆலையில் முதல் கட்ட செயல்பாடுகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளது என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

இந்த ஆலை 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முழு வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுமா அல்லது இன்சின் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்திக்கு மட்டுமே இந்த ஆலை பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவான முடிவை ஃபோர்டு நிர்வாகம் இதுவரையில் வெளியிடவில்லை.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஃபோர்டு தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், "அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த செயல்முறையில் சிறிது மந்தநிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது பணிகள் மீண்டும் சீராக நடைபெறுகின்றன," என கூறினார்.
ஃஃபோர்டு நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய உதிரிபாகங்களுக்கான லிஸ்டை முடிவு செய்து, தற்போது இதன் தயாரிப்புக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு 25% கடுமையான வரி விதித்தது ஃபோர்டு நிறுவனம் சென்னை தொழிற்சாலை செயல்பாடுகளை துவங்குவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.
ஆனால் தற்போது டொனால்ட் டிரம்ப் ஆட்டோமொபைல் துறை இறக்குமதி மீது விதித்திருந்த வரியைகளை தளர்த்தவும் முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கார், இன்ஜின், உதிரிபாகங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தாலும் பெரும் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்-ன் இந்த முடிவு ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையை மீட்டு எடுக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
2024 செப்டம்பரில், ஃஃபோர்டு மோட்டார் தமிழ்நாடு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் (LoI) கையெழுத்திட்டு, மறைமலைநகர் ஆலையில் வாகன உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு உறுதியளித்தது. இந்த திட்டம் முக்கியமாக ஏற்றுமதி சந்தைகளை குறிவைத்து அமைந்தது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆறு மாதங்கள் கடந்தும் மறைமலை நகர் ஆலையில் எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை.
தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி பணிகளை துவங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய துவங்கியுள்ளது. விரைவில் மறைமலைநகர் தொழிற்சாலை முழு வீச்சில் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications