ஆப்பிள் முதல் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றியுள்ள நிலையில் சென்னையில் பிரம்மாண்ட ஸ்மார்ட்போன் தொழிற்சாலையை வைத்துள்ளது பாக்ஸ்கான்.
சீனாவில் Zhengzhou பகுதியில் பாக்ஸ்கான் வைத்திருக்கும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தொழிற்சாலைக்கு இணையாகச் சென்னை தொழிற்சாலையும் மாற்ற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான ஊழியர்களைச் சேர்ப்பதும், உற்பத்தி தளத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கான பிரம்மாண்ட ஹாஸ்டல்-ஐ கட்ட முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சீனாவில் இருக்கும் தொழிற்சாலை கட்டமைப்பை போலவே மாற்ற முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் - பாக்ஸ்கான்
ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய சப்ளையர் ஆக விளங்கும் பாக்ஸ்கான் தனது சென்னை தொழிற்சாலைக்கு அருகில் தொழிலாளர்கள் தங்குவதற்காகப் பிரம்மாண்டமான ஹாஸ்டல் காம்பிளக்ஸ் கட்ட முடிவு செய்துள்ளது. இந்த ஹாஸ்டல் காம்பிளக்ஸ்-ல் சுமார் 60000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு வசதிகள் இருக்கும் கூறப்படுகிறது.
பாக்ஸ்கான் சென்னை
ஆப்பிள் நிறுவனம் கடந்த 6 மாதத்தில் சீனாவில் இருக்கும் உற்பத்தியை அதிகளவில் இந்தியாவுக்கும், இதில் பெரும் பகுதி பாக்ஸ்கான் நிறுவனத்திற்கும் கொடுத்துள்ளது, இந்த நிலையில் தான் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் நிறுவனம் சென்னை தொழிற்சாலையை எதிர்கால உற்பத்தி வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் போதுமான கட்டமைப்பை உருவாக்க தற்போது 60000 பேர் தங்கக் கூடிய பிரம்மாண்ட ஹாஸ்டல்-ஐ கட்ட முடிவு செய்துள்ளது.
சீனா Zhengzhou தொழிற்சாலை
இதேபோன்ற கட்டமைப்பு தான் சீனாவில் Zhengzhou பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்கான் நிறுவனம் அடுத்த 2 வருடத்தில் தனது ஊழியர்களை 4 மடங்கு உயர்த்த இலக்கு வைத்துள்ளது.
சீனா பிரச்சனை
இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் சீனா Zhengzhou தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் பாக்ஸ்கான் நிர்வாகம் மத்தியிலான பிரச்சனையில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளைத் தொழிலாளர்கள் அடித்துத் துவைத்தனர்.
தொழிலாளர்கள் தாக்குதல்
இதனால் பாக்ஸ்கான் நிர்வாகம் பெரும் தொகையைக் கொடுத்து அதிகளவிலான ஊழியர்களை வெளியேற்றியது, இதோடு புதிய ஊழியர்களை Zhengzhou பகுதியில் இருந்து எடுக்காமல் பிற பகுதிகளில் இருந்து எடுத்து வருகிறது.
ஹாஸ்டல்
இதனால் இந்தியாவில் அதிகரித்து உள்ள உற்பத்தி இலக்குகளைச் சமாளிக்கவும், 24 மணிநேரமும் உற்பத்தி பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகத் தொழிலாளர்களைத் தங்க வைக்கத் தொழிற்சாலைக்கு அருகிலேயே இந்த ஹாஸ்டல் வேகமாகக் கட்டப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை
தைவான் நாட்டின் ஐபோன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் இந்தியப் பிரிவான பாக்ஸ்கான் ஹான் ஹைய் -ன் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் 14 போன்களை உற்பத்தி செய்யப்படுகின்றன.
70,000 ஊழியர்கள்
தற்போது இத்தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 15,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் மட்டத்தில் இருப்பவர்கள். அடுத்த 18 மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70,000 ஆக உயர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
3 ஹாஸ்டல்
புதிய பணியாளர்களுக்குத் தங்குமிட வசதிகள் தேவை என்பதால் இந்த ஹாஸ்டல் கட்டுமான பணிளை துவங்கியுள்ளது பாக்ஸ்கான் நிர்வாகம். இதன் மூலம் அடுத்த 10 மாதங்களில் 20,000 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி தயாராகிவிடும். கட்டப்பட்டு வரும் இரண்டு தங்கும் விடுதிகள் 60,000 தொழிலாளர்கள் தங்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications