சென்னை Foxconn தொழிற்சாலையில் பெண்களுக்கு இப்படியொரு ரூல்ஸா.. அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் வைத்துக்கொண்டு உலகநாடுகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரித்து உள்நாட்டில் அதன் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்தும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் வருகிறது.

இதேபோல் பாக்ஸ்கான் நிறுவனம் நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் கல்யாணமான பெண்களுக்கு வேலை இல்லை என்ற விதி இருப்பதாக ராய்ட்டரஸ் வெளியிட்டுள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

சென்னை Foxconn தொழிற்சாலையில் பெண்களுக்கு இப்படியொரு ரூல்ஸா.. அதிர்ச்சியில் மக்கள்..!

சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐபோன் தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு பெண்கள் மனமுடைந்து நின்றுகொண்டு இருந்துள்ளனர். இவர்களின் பெயர் பார்வதி மற்றும் ஜானகி, இருபது வயதான இந்த பெண்கள், 2023 மார்ச் மாதத்தில் வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனத்தால் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வுக்காக வந்திருந்தனர்.

ஆனால், அவர்கள் தொழிற்சாலையின் செக்யூரிட்டி அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருமணமாகிவிட்டீர்களா? என்று கேட்டு வாசலிலேயே நிற்கவைத்து விட்டுனர். இதன் பின்னர் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளனர்.

இருவரும் திருமணமாகி இருப்பதால் வேலை கிடைக்கவில்லை, என்று பார்வதி தனது கிராமத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் பார்வதி கூறுகையில் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு நேர்முகத் தேர்வுக்காக எங்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர் கூட, திருமணமான பெண்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எங்களிடம் கூறினார், என்று பார்வதி இந்த பேட்டியில் கூறினார். ஆனாலும் நாங்கள் முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தோம். நேர்முகத் தேர்வில் பங்கேற்கக் கூட முடியாமல் தோல்வி அடைந்து வீடு திரும்பினோம் என சோகத்துடன் ராய்ட்டர்ஸ்-க்கு இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ராய்ட்டர்ஸ் தனிப்பட்ட முறையில் நடத்திய ஆய்வில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், அதன் முதன்மை சென்னை ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வருவது கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் திருமணமான பெண்களுக்கு, திருமணமாகாத பெண்களை விட குடும்ப பொறுப்புகள் அதிகம் இருப்பதாகக் காரணம் கூறி இவ்வாறு பெண்களை பணியில் அமர்த்துவது தவிர்க்கப்படுகிறது என்பது ராய்ட்டர்ஸ் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் இந்தியாவின் முன்னாள் மனிதவள பிரிவு அதிகாரியான எஸ்.பால் என்பவர் நிறுவனத்தின் நிர்வாகிகள், வேலைக்கு ஆள் தேடும் இந்திய முகவர்களுக்கு (Hiring agency) வாய்மொழியாக பணியாளர் தேர்வு விதிமுறைகளில் ஒரு பகுதியாக திருமணமான பெண்களை வேலைக்குத் தேர்வு செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ்-க்கு தெரிவித்துள்ளார்.

இந்த முகவர்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்காக ஊழியர்களைக் கண்டறிந்து, நேர்முகத் தேர்வுக்கு அழைத்து வந்து பணியில் அமர்த்துவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

கலாச்சார பிரச்சினைகள் மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக ஃபாக்ஸ்கான் பொதுவாகத் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்று பால் கூறினார். எஸ்.பால் 2023 ஆகஸ்ட் மாதத்தில் அவர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை விட்டு வெளியேறி, அதிக சம்பளம் தரும் ஒரு கன்சல்டிங் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு பல பிரச்சினைகள் இருப்பதாக நிறுவனம் கருதுகிறது என்று பால் மேலும் கூறினார். அவற்றில் ஒன்று: பெண்கள் திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளைப் பெறுவார்கள். திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தும்போது ஆபத்து காரணிகள் அதிகரிக்கின்றன என்று ராய்ட்டர்ஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் எஸ்.பால் கூறியதை சுமார் 17 ஊழியர்களிடமும், 12க்கும் அதிகமான வேலைவாய்ப்பு ஏஜென்சிகளிடமும் உறுதி செய்யப்பட்டு இத்தகவலை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பெண்களின் பங்கீடு வேலைவாய்ப்பு துறையில் அதிகரிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பஸ் பயணம் இலவசம், கல்வி உதவி தொகை, விடுதி சேவை, பள்ளி கல்வி நல திட்டங்கள் என பலவற்றைச் செய்து வரும் வேளையில் பாக்ஸ்கானின் இந்த நடவடிக்கை மிகவும் தவறானது.

பாக்ஸ்கான் நிறுவனத்தில் எப்போதெல்லாம் அதிகப்படியான உற்பத்தித் திறன் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த விதிகள் தளர்த்தப்பட்டு பணிக்கு ஊழியர்களைச் சேர்க்கப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் பல வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கி தருவதற்காக அவர்களின் திருமணமான விபரத்தை மறைத்து பணியில் சேர்த்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் கண்டறிந்துள்ளது.

இதற்கு முன்பே ஒரு முறை சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த செய்திக்கு விளக்கம் அளித்த ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டில் பணியாளர் தேர்வு நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டு, அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தன.

ஆனால், ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை, மீண்டும் பாகுபாடான பணி அமர்த்தும் முறையைக் கடைப்பிடித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியச் சட்டத்தில் திருமணமானதைக் காரணம் காட்டி வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்யப்படவில்லை என்றாலும், ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு கொள்கைகளில் இத்தகைய பாகுபாட்டைத் தடை செய்யப்பட்டு உள்ளது. இதையும் தாண்டி தற்போது திருமணமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

இதுகுறித்து ஆப்பிள் கூறுகையில் "தொழில்துறையில் மிக உயர்ந்த தரங்களை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்," என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் சில திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

"2022 ஆம் ஆண்டில் பணியாளர் தேர்வு நடைமுறைகள் குறித்து முதன் முதலில் செய்தி வெளியான போது ஆப்பிள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் தேர்வு நிறுவனத்துடன் இணைந்து மாதாந்திர தணிக்கைகளை நடத்தினோம்," என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்தியாவில் உள்ள எங்கள் அனைத்து சப்ளை செயின் நிறுவனங்களும் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன, இதில் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் அடங்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இதேபோல் பாக்ஸ்கான் திருமண நிலை, பாலினம், மதம் போன்றவற்றைக் காரணம் காட்டி ஊழியர்களை பணியில் அமர்த்துவது பாகுபாடு காட்டும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+