ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த Lamprell, சென்னையில் முதல் முறையாகத் தனது இன்ஜினியரிங் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் GCC Magnet பட்டியலில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் வேளையில் தற்போது Lamprell வருகை மூலம் வளைகுடா கார்ப்ரேட் சந்தையைக் கவனிக்கும் பகுதியாகச் சென்னை மாறியுள்ளது.
Lamprell இந்த இன்ஜினியரிங் சென்டரை பெருங்குடி, மில்லேனியா பிசினஸ் பார்க்கில் அமைக்கப்படலாம் என்றும், இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைவாய்ப்பு கிடைக்கும். 200 வேலைவாய்ப்புகள் என்பது குறைவாக இருப்பது போல் தெரியலாம், ஆனால் வளைகுடா கார்ப்ரேட் சந்தை சென்னை பக்கம் திரும்பும் முக்கியமான தருணமாக இதைப் பார்க்க வேண்டிய விஷயம் இது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட Lamprell plc, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எண்ணெய் & எரிவாயுத் துறைகளுக்குச் சேவை செய்யும் கட்டுமானம் மற்றும் ஃபேப்ரிகேஷன் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சாம்ராஜ்ஜியம். Lamprell நிறுவனம் காற்றாலை டர்பைன்களையும், ஆழமற்ற தண்ணீர் பகுதியில் பயன்படுத்தப்படும் டிரில்லிங் ஜாக்அப் ரிக், லிஃப்ட்போட் மற்றும் நிலப்பகுதியில் பயன்படுத்தப்படும் ரிக்-களை உருவாக்குகிறது.
Lamprell நிறுவனம் ரிங் புதுப்பித்தல் பணிகளையும் மேற்கொள்கிறது. 2021 ஆம் ஆண்டில் Lamprell நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எண்ணெய் & எரிவாயுத் துறைகள் மட்டுமல்லாமல், பிற தொடர்புடைய தொழில்களுக்கும் சேவை செய்யும் ஒரு டிஜிட்டல் வணிக பிரிவைத் துவங்கியது.
இதில் இன்ஜினியரிங் பிரிவும் உள்ளது கவனிக்க வேண்டியது. Lamprell ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்டு இருந்தாலும் இது லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 1976 ஆம் ஆண்டில் ஸ்டீவன் லாம்ப்ரெல் என்பவரால் துபாயில் நிறுவப்பட்டது.
Lamprell மூன்று முக்கிய வணிக பிரிவுகளைக் கொண்டுள்ளது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் & எரிவாயு மற்றும் டிஜிட்டல். அதன் முக்கிய செயல்பாட்டு மையங்கள் மற்றும் தளங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதன் முக்கிய அலுவலகம் மற்றும் தொழிற்சாலை ஹாம்ரியா-வில் அமைந்துள்ளது, மேலும் இது ஜபல் அலி மற்றும் துபாய் முதலீட்டுப் பூங்காவில் இரண்டாவது தளங்களைக் கொண்டுள்ளது. Lamprell, சவுதி அரேபியாவில் உள்ள Industrial Maritime Yard-ல் சவுதி அராம்கோ, Bahri மற்றும் HHI ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.


Click it and Unblock the Notifications