தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. சிப்காட் என்பது தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாட்டு கழகம் ஆகும்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடங்களை கண்டறிந்து அங்கே தொழில் பூங்காக்களை நிறுவுவது, அதற்கான நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் எல்லாம் தொழில் ரீதியான உற்பத்தி அதிகரித்து, வேலை வாய்ப்புகள் பெருகி அந்த பொருளாதார வளர்ச்சிகளும் அடைந்து இருக்கின்றன .

அந்த வகையில் சென்னையில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருக்கிறது . சென்னையில் ஏற்கனவே சிறுசேரி ,ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன. அதோடு புதிதாக ஒரு தொழில் பூங்காவும் இணைய உள்ளது.
1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிப்காட் நிறுவனம் தற்போது வரை சுமார் 50 தொழில் பூங்காக்களை நிறுவி இருக்கிறது. 24 மாவட்டங்களில் இவற்றை நிறுவி வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது. இவற்றில் வாகன உற்பத்தி ஆலைகள் ,மின்னணு சாதன உற்பத்தி ஆலைகள், தோல் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இத்தகைய சூழலில் சென்னையில் மேலும் ஒரு புதிய சிப்காட் அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது .
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூருக்கு அருகிலேயே இந்த புதிய தொழில் பூங்காவை அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் மதுரமங்கலம் பகுதியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மதுர மங்கலத்தில் தற்போது சியாட் ஆலை செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகிலேயே இந்த தொழில் பூங்கா அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 423 ஏக்கர் பரப்பளவில் 531 கோடி ரூபாய் முதலீடு இந்த சிப்காட்டை அமைக்க ஆய்வு செய்ய இருக்கிறார்கள் .
இந்த சிப்காட் பயன்பாட்டுக்கு வரும்போது சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என சொல்லப்படுகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு அருகிலேயே இந்த தொழில் பூங்கா வர இருப்பதால் பல்வேறு ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களும் இங்கே தங்களுடைய ஆலைகளை அமைக்க முன்வரும். இதன் மூலம் இந்த பகுதி தொழில் உற்பத்தி ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் சிறந்த வளர்ச்சியை பெறும்.
தமிழ்நாடு அரசு வளர்ச்சி என்பது சென்னை நகரத்தோடு நின்றுவிடாமல் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக தான் சிப்காட்டுகள், டைடல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றை கட்டமைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications