சென்னை: மாநில அளவிலும் தேசிய அளவிலும் படகு போட்டிகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்க சிறு வயதில் இருந்தே பயிற்சி பெறுவது கட்டாயம். இவ்வாறு படகுகளை இயக்குவது என்பது மிக நேர்த்தியான ஒரு வேலை . இதற்கு தொடர் பயிற்சிகளே மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
வசதி படைத்த மாணவ, மாணவிகள் எளிதாக பணம் கட்டி படகு பயிற்சி பெற முடிகிறது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்த படகு பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் மெட்ராஸ் போட் கிளப்பும் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கின்றன. இதன்படி இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களில் 15 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஓர் ஆண்டு காலத்திற்கு இலவசமாக படகு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு படிப்பு மட்டும் இல்லாமல் மற்ற திறமைகளை வளர்க்கவும் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் மெட்ராஸ் போட் கிளப் எனப்படும் படகு குழாமுடன் இணைந்து இந்த படகு பயிற்சி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த முயற்சியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது.
மெட்ராஸ் போட் கிளப் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே சென்னையில் நிறுவப்பட்டது.1867ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் போட் கிளப்பை சென்னையில் நிறுவி படகு பயிற்சி மேற்கொண்டனர். இதனை அடுத்து போட்டிகள் நடத்துவது பயிற்சிகள் வழங்குவது என பெரிய அமைப்பாக இது மாறி இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய 13 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இந்த பயிற்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . குறைந்தபட்சம் ஐந்து அடி உயரம் இருக்கக்கூடிய நீச்சல் தெரிந்த மாணவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தம் 15 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஓராண்டுக்கு இலவச படகு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் சென்னை மாநகராட்சியும் மெட்ராஸ் போட் கிளப்பும் ஏற்றுக் கொள்கின்றன.
இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அறியும் சோதனை நடத்தப்படும் என்றும், பயிற்சிக்கான உபகரணங்கள், சத்தான உணவு ஆகியவை வழங்கப்படும் என்றும் மெட்ராஸ் போட் கிளப் அறிவித்துள்ளது. மாணவர்கள் பயிற்சி பெறும் போது பாதுகாப்புக்காக இரண்டு நிபுணர்கள் எப்பொழுதுமே தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு வரக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் மெட்ராஸ் போட் கிளப்பில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் பள்ளிகளில் தான் இருப்பார்கள் என்பதால் பயிற்சிக்கு வந்து செல்வது என்பது அவர்களுக்கு எளிதானதாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது வரை கோட்டூர்புரம், தரமணி மற்றும் திருவான்மியூர் பகுதியினை சேர்ந்த அரசு பள்ளிகளில் இருந்து தலா ஒரு மாணவர்,ஒரு மாணவி என ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஆகஸ்ட் 3ஆம் தேதியிலிருந்து இந்த பயிற்சிகள் தொடங்க இருக்கின்றன. இந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான படகு போட்டிகளில் பங்கேற்க வைக்கப்படுவார்கள். இந்த மாணவர்கள் தங்களுடைய பயிற்சியை முடித்த பிறகு கல்லூரிகளுக்கு செல்லும்போது விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உதவித்தொகை பெறும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications