பெங்களூரு: பெங்களூருவில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பெங்களூருவில் இருக்கும் பணியாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கே திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பெங்களூர் மாநகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய மழையின்மை மற்றும் கிணறுகள் வற்றி போனது போன்ற காரணங்களால் தண்ணீர், குறிப்பாக பல இடங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் பெங்களூருவில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களான கேரளா உள்ளிட்டவற்றுக்கு மாறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
தென் இந்தியாவில் பொறுத்தவரை பெங்களூரு மட்டுமல்ல சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களை பொருத்தவரை கர்நாடகா, கேரளா, தெலுங்கானா , தமிழ்நாடு ஆகியவற்றில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 15% மக்கள் உள்ளனர். ஆனால் இந்த மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக அளவிலேயே இருக்கிறது.
குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி துறைகளில் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு அதிகரித்து அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் இங்கெல்லாம் தண்ணீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுக்க கூடும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான நீர் ஆதாரமானது விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. கிட்டதட்ட 85 சதவீத நீர் ஆதாரம் விவசாயம் மற்றும் மின்சார உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
தண்ணீர் அதிகம் தேவைப்படக்கூடிய பயிர்களை நாம் அதிக அளவில் விளைவிப்பதும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் நம்மிடம் அதிகமாக இருப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் இதுபோன்ற தண்ணீர் பிரச்சனைகள் தொடர்ந்தால் பெருநிறுவனங்கள் இந்த நகரங்களில் தொழில்களை தொடங்க யோசிக்கும். இது நகரத்தின் பொருளாதாரத்தையே பாதிக்கும்.
பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறிப்பாக பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவற்றால் இதுபோன்ற மெட்ரோ நகரங்கள் அதிக அளவில் பாதிக்க கூடும் என ஆய்வறிக்கைகள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளன. எனவே இந்த மாற்றங்களை எல்லாம் தாங்கும் விதத்தில் நகரங்களின் கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது.
இல்லையெனில் பெங்களூருக்கு ஏற்பட்ட நிலைமை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஏற்படக் கூடும் . எனவே தண்ணீர் பிரச்னை, மழை வெள்ளம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வகையில் நகரங்களை கட்டமைத்தாக வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications