இந்திய வங்கிகளின் நிர்வாகம் செய்யும் முறையை தீவிரமாக கண்காணிக்கும் ஆர்பிஐ, அடுத்தடுத்து விதிமுறைகளை மீறும் அல்லது விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கேஒய்சி வழிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கிக்கு, இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 55 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி உயர் மதிப்பு மோசடியின் அடிப்படையில் ஜூலை 2020 இல் ஆர்பிஐ ஆய்வுக்கு பின் வழிமுறைகளுக்கு இணங்காதது உறுதி செய்யப்பட்ட பின்பு அபராதம் விதித்துள்ளது. இதுக்குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆய்வுகளின் முடிவில் இந்தியன் வங்கி ஆர்பிஐ வழிகாட்டுதல்களுக்கு இணங்காதது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும், வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறியதால் இதற்கான விளக்கம் கேட்டு, ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கொடுக்குமாறு ஆர்பிஐ நோட்டீஸ் அனுப்பியது. இதன் பின்பு தான் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதோடு இந்த அபராதம் வாடிக்கையாளர்கள் உடன் வங்க செய்த பரிமாற்றம் வர்த்தகத்திற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை விளக்கியதால், இந்திய வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. இந்த அபராதம் இந்திய வங்கியின் நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதன் வாயிலாக நடந்துள்ளது.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக இருக்கும் கரூர் வைஸ்யா வங்கி மீது கடந்த மாதம் சில விதிமுறைகளை பின்பற்றாததற்காக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அபராதம் விதிக்க காரணம் ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகள்.
ரிசர்வ் வங்கி பிப்ரவரி 21, 2022 முதல் மார்ச் 04, 2022 வரையிலான காலகட்டத்தில் கரூர் வைஸ்யா வங்கியில் select scope inspection (எஸ்எஸ்ஐ) ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் சில கணக்குகளை மோசடிகள் என Joint Lenders' Forum முடிவு செய்த ஒரு வாரத்திற்குள், ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க வங்கி தவறிவிட்டது. இதை உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆர்பிஐ 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய வங்கிகளில் வாராக் கடன் துவங்கி, வங்கி நிர்வாகத்தின் மெத்தனம் வரையில் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் விதிமுறைகளை கடைப்பிடிப்பதை கடுமையாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications