தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வேகமாக வளரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது மட்டும் அல்லாமல் சேவை துறையில் மாபெரும் வளர்ச்சியை எட்டியும் பயணத்தில் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த வாயிலாக சென்னையில் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய வர்த்தகத்திற்காகவும், வெளிநாட்டு வர்த்தகத்திற்காகவும் அலுவலகத்தை திறந்து வருகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகளவில் வர்த்தகம் செய்யும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனமான Gigamon சென்னையில் புதிதாக அலுவலகத்தை திறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் புதிய ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் பகுதியில் சுமார் 1.2 லட்சம் சதுரடி அலுவலக இடத்தை திறந்துள்ளது.

இதை தொடர்ந்து சுவிஸ் நாட்டின் முன்னணி பயோபார்மா நிறுவனமான Roche மற்றும் அமெரிக்காவின் முன்னணி மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான ZS ஆகிய இரு நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை தங்களுடைய புதிய அலுவலகத்தை திறந்துள்ளதை தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டின் நிதி சேவை நிறுவனமான Worldline சென்னையில் தனது அண்ட்ராய்டு POS மற்றும் டிஜிட்டல் ஆட்டோமேஷன் சேவைக்காக புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. சென்னயில் அடுத்தடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதை தொடர்ந்து office Space ரியல் எஸ்டேட் பிரிவில் வேகமாக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
சென்னையில் office Space ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளரும் காரணத்தால் அடுத்தடுத்து பல முன்னணி நிறுவனங்கள் அலுவலகங்கள் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அலுவலக ரியல் எஸ்டேட் பிரிவில் இருக்கும் Flex நிறுவனத்தின் Incuspaze சென்னையில் சுமார் 1,00,000 சதுரடி அளவிலான அலுவலக பகுதியை உருவாக்க உள்ளது.

இதேபோல் சென்னையில் பிரபலமான Arihant Group நிறுவனம் சைதாபேட்டையில் சுமார் 17 கிரவுண்ட் மதிப்பிலான இடத்தில் அலுவலக கட்டிடத்தை அமைக்க 300 கோடி ரூபாய மதிப்பிலான ஒப்பந்தத்தை Equitas bank முடித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் முதலீடு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் பல துறையில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications