இந்தியாவின் இரண்டாவது பெரிய டேட்டா சென்டர் சந்தையாகச் சென்னை விளங்குவது எத்தனை பேருக்குத் தெரியும். தமிழ்நாடு ஐடி சேவை மற்றும் டெக் சேவைத் துறை வளர்ச்சிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், ஒரு சில துறைகள் சைலென்டாக மாஸ் காட்டி வருகிறது. இதில் முக்கியமான ஒன்று தான் டேட்டா சென்டர்.
இன்றைய டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு முக்கிய தேவையாக இருக்கும் டேட்டா சென்டர் தேவையில் நாட்டின் மொத்த தேவையில் பெரும் தேவையைச் சென்னை பூர்த்தி செய்கிறது என்றால் மிகையில்லை. சுமார் 88 MW திறன் கொண்ட டேட்டா சென்டர் கட்டமைப்பு சென்னையில் உள்ளது.

சென்னையின் டேட்டா சென்டர் வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய காரணிகளாக இருப்பது நிலையான மின்சார சப்ளை, தேவைக்கு அதிகமாக திறன் வாய்ந்த ஊழியர்கள் படை, அரசின் கொள்கைகள், ஆறு கேபிள் லேண்டிங் நிலையங்கள் இருப்பது மூலம் உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் வலுவான இணைப்பை வழங்குகிறது.
இதன் மூலம் சென்னை இரண்டு பகுதிகள் டேட்டா சென்டர் மையங்களாக உருவெடுத்துள்ளது. அம்பத்தூர் மற்றும் சிருசேரி ஆகிய இரண்டு பகுதிகளில் சிறிதும், பெரிதுமாக அதிகப்படியான டேட்டா சென்டர்கள் அமைந்துள்ளது.
சென்னையில் தற்போது டேட்டா சென்டர் வர்த்தகத்தில் CtrlS டேட்டா சென்டர்கள், வெப் வேர்க்ஸ், யோட்டா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் ஆகியவை டேட்டா சென்டர் நிறுவனங்களாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 வருடத்தில் 1.54 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இத்துறையில் வரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவில் வரும் மொத்த டேட்டா சென்டர் முதலீடுகளில் சுமார் 27 சதவீதமாகும்.


Click it and Unblock the Notifications