சென்னை தான் H1B விசா மோசடியின் தலைநகரம்!! முன்னாள் தூதரக அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!!

திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வதற்கு பயன்படுத்தப்படக்கூடிய ஒரு விசா தான் ஹெச்1பி விசா. அண்மைக்காலமாகவே இந்த ஹெச்1பி விசா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது . ஹெச்1பி விசா கேட்ட் விண்ணப்பம் செய்பவர்களின் சமூக வலைதள பதிவுகள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்த பிறகு தான் விசா வழங்க வேண்டும் என தூதரக அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை தான் H1B விசா மோசடியின் தலைநகரம்!! முன்னாள் தூதரக அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!!

அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வேலை செய்யக்கூடிய வெளிநாட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். அமெரிக்காவை சேர்ந்த அமேசான், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ் , இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் ஹெச்1பி விசாவில் தான் பெருமளவிலான இந்தியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளன.

இந்த சூழலில் இந்தியாவில் ஹெச்1பி விசா வழங்குவதில் பெரிய மோசடி நடப்பதாகவும் குறிப்பாக சென்னை தான் ஹெச்1பி விசா மோடிக்கான தலைநகரமாக இருக்கிறது என்றும் முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்க கூடிய பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா - அமெரிக்கரான Mahvash Siddiqui அமெரிக்க தூதரக அதிகாரியாக தான் சென்னை தூதரக அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பணிபுரிந்த போது மிகப்பெரிய அளவில் ஹெச்1பி விசா சம்பந்தப்பட்ட மோசடி நடப்பதை கண்டறிந்ததாக கூறியிருக்கிறார் .

போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் ,போலியான வங்கி அறிக்கைகள் ,போலியான பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை சமர்ப்பித்து பலரும் முறைகேடாக ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு செல்ல முயல்கின்றனர் .அதற்கு முக்கியமான ஒரு இடமாக சென்னை தூதரகம் தான் அமைந்திருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். ஐதராபாத்தில் இதற்காக நிறுவனங்களே செயல்படுகின்றன என அவர் கூறியிருக்கிறார் .

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்ததாக கூறுவார்கள் ஆனால் ஒரு பேசிக் கோடிங் தேர்வை நடத்தினாலே அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பது தெரிய வந்துவிடும் என்கிறார். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கக்கூடிய ஊழல் மிக்க ஹெச்ஆர் அதிகாரிகள் இது போன்ற நபர்களை வேலைக்கு தேர்வு செய்து அவர்களுக்கு போலி வேலை வாய்ப்பு கடிதம் உள்ளிட்டவற்றை வழங்கி விடுகிறார்கள் ,இதன் மூலம் தகுதியே இல்லாதவர்கள் கூட ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு செல்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக அமெரிக்காவில் கடினமாக ஐடி படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை ஏனெனில் அவர்களுக்கு மாற்றாக குறைந்த ஊதியத்தில் இந்த ஹெச்ஆர் மற்றும் மேலாளர்கள் இந்தியாவிலிருந்து தகுதியற்றவர்களையும் திறனற்றவர்களையும் ஹெச்1பி விசாவில் வேலைக்கு அமர்த்து விடுகிறார்கள் என அவர் சாடி இருக்கிறார் .

சென்னையில் தூதரகத்தில் தான் பணியாற்றபோது 20 லிருந்து 45 வயதுக்கு உட்பட்ட ஏராளமான இந்தியர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஹெச்1பி விசா பெற முயற்சி செய்வதை நான் கண்டறிந்தேன் என தெரிவித்திருக்கிறார் . சென்னையில் 2005 - 2007 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ஹெச்1பி விசாக்கள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன தற்போது அது ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் என உயர்ந்திருப்பதாக சுட்டி காட்டி இருக்கிறார் .

ஹெச்1பி விசாவில் நடக்கும் இந்த மோசடிகளுக்கு புதிதாக விசா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்கிறார். ஹெச்1பி விசா என்பது அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஆனது ஆனால் இதில் இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என கூறுகிறார். இந்த திட்டத்தில் எப்படி எல்லாம் முறைகேடு நடக்கப்படுகிறது என்பதை விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் , மிக கவனமாக பட்டப்படிப்பு சான்றிதழ், அவர்களுக்கு இருக்கும் திறன்கள் இதற்கு முன்பு வேலை செய்த விவரங்களை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+