சென்னை: இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ,புனே ஆகிய நகரங்கள் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக இருக்கின்றன. அதிக அளவில் நிறுவனங்கள் இருக்கக்கூடிய நகரங்களில் எல்லாம் எந்த நகரத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது என்பது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
வலுவோக்ஸ் என்ற நிறுவனம் PayMap survey என்ற பெயரில் நடத்தியுள்ள ஆய்வின்படி ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய நகரங்களாக முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை பின்னுக்கு தள்ளி இவை முன்னிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது இந்தியாவின் பிரதான நகரங்களில் இருக்கக்கூடிய 1311 நிறுவனங்கள் மற்றும் 2500 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை தான் நல்ல சம்பளம் வழங்கும் நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. சென்னையில் நுழைவு நிலையில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு எந்த நகரத்திலும் இல்லாத அளவில் அதிகபட்சமாக மாதத்திற்கு 30 ,000 ரூபாய் சராசரி சம்பளமாக கிடைக்கிறது. ஹைதராபாத்தை பொருத்தவரை மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்ட ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் நகரமாக இருக்கிறது. இங்கே சராசரியாக மாதத்திற்கு 69,700 ரூபாய் சம்பளமாக கிடைக்கிறதாம்.
இதில் ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களை பொருத்தமட்டில் இந்தியாவில் சராசரியாக நுழைவு நிலை சம்பளம் என்பது 28,100 ரூபாயாக உள்ளது. ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 68,200 ரூபாயக இருக்கிறது. ஐடி வேலைகள், ஹெச் ஆர் பணிகள், சாஃப்ட்வேர் டெவலப்பர்களுக்கு 25,000 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுநிலை சம்பளம் கிடைக்கிறது. 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களுக்கு சராசரியாக 65 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறதாம்.
பெரும்பாலான ஊழியர்கள் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு நகரத்தை தேர்வு செய்வதில்லையாம். அந்த நகரத்தின் வாழ்க்கை செலவினம் எவ்வாறு இருக்கிறது, வாழ்க்கை தரம் எப்படி இருக்கிறது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் தற்போது இருக்க கூடிய இளைஞர்கள் எந்த நகரத்தில் வேலைக்கு செல்வது என்று முடிவினை எடுக்கிறார்களாம். அந்த வகையில் டெல்லியில் வாங்கும் சம்பளத்தில் 96 சதவீத தொகை செலவாகி விடுவதாக பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மும்பையில் வாங்கும் சம்பளத்தில் 95 சதவீதம் , பெங்களூரில் 93 சதவீதம் செலவாகி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க முடிகிறது, மற்ற நகரத்தில் அவ்வாறு இல்லை என தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications