இந்தியாவில் தீபாவளி தந்தோராஸ் என பல விழாக்கள் வரவுள்ள நிலையில், விழாக்கால பருவம் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே துணிக்கடைகளும், நகைகடைகளிலும் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றன. பல ஷாப்பிங் மால்களிலும் சலுகை மழை பொழிந்து வருகின்றன.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு மிக விமரிசையாக இந்த விழாக்கால பருவம் இருப்பதாக கடை உரிமையாளார்கள் கூறுகின்றனர்.
கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் தேவை அதிகரித்துள்ளதாகவும், மக்கள் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளதாக நகை கடை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
ஊழியர்களுக்கு கார், பைக் பரிசு
அதேபோல தீபாவளிக்கு முன்னதாகவே போனஸ் உள்ளிட்ட சில சலுகைகளை நிறுவனங்கள் அறிவிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் தீபாவளி போனஸ் என்பது களைகட்டத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஊழியர்களை குஷிப்படுத்தும் விதமாக தீபாவளி பரிசாக, சென்னை கடை உரிமையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கினை அளித்துள்ளனர்.
கஷ்டமான காலத்திலும்
சென்னை நகைக் கடை உரிமையாளரான ஜெயந்தி லால், என்னுடைய கடினமான நேரத்திலும் எங்கள் ஊழியர்கள் என்னுடன் இருந்தனர். ஆக அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவரிடம் பணிபுரியும் 10 பேருக்கு கார் மற்றும் 20 பேருக்கு தீபாவளி பரிசாக பைக்கினை கொடுத்துள்ளார்.
ஆனந்த கண்ணீர்
இதன் மூலம் தனது ஊழியர்களுக்கு தனது ஆதரவினை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயந்திலாலில் இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ள ஊழியர்கள், பலரும் சந்தோஷத்தில் தங்களது ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர். மேலும் ஊழியர்கள் இது தங்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ் ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களும் எனது குடும்பத்தினர் தான்
ஜெயந்திலால் எங்கள் ஊழியர்கள் வெறும் ஊழியர்கள் மட்டும் அல்ல, எனது இரண்டாவது குடும்பத்தினர். ஆக நான் அவர்களை எனது குடும்பத்தினர் போல நடத்த விரும்புகிறேன். அவர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க விரும்பினேன். நான் எனது ஊழியர்களுக்கு பரிசு கொடுப்பதில் மிக சந்தோஷமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிசின் மதிப்பு மொத்தம் சுமார் 1.2 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகின்றது. இதனை கொடுத்தவர் சல்லான ஜுவல்லரி மார்ட் உரிமையாளர் ஜெயந்திலால் சாயந்தி ஆகும்.
கட்டுபடுத்த முடியாத அன்பு
இது குறித்து அந்த நகைக்கடை இன்ஸ்டாகிராமில், ஒரு உணர்ச்சிகரமான பதிவினை பதிவுட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஊழியர்களுக்கு நாங்கள் மிகுந்த கடைமை பட்டுள்ளோம். இது கட்டுப்படுத்த முடியாத ஒரு அன்பு உள்ளது. அது வாடிக்கையாளர்களீடமோ அல்லது ஊழியர்களிடமோ இருக்கலாம். அவர்கள் நிபந்தனையின்றி வாழ்கிறார்கள். அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications