சென்னை: ஜிசிசி மையம் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளுக்காக அலுவலகங்கள் லீசுக்கு எடுக்கப்படுவதில் இந்தியாவிலேயே சென்னை நகரம் முன்னிலை வகிப்பது தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் ஜிசிசி எனப்படும் பன்னாட்டு திறன் கிளைகளை இந்தியாவில் நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே இது போன்ற ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஐடி துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய மற்றும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பிரிவாக ஜிசிசி மையங்கள் இருக்கின்றன.
இந்தியாவிலேயே சென்னையில் தான் 2024 ஆம் ஆண்டின் அதிக எண்ணிக்கையிலான ஜிசிசி மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டில் சென்னையில் 8.1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது , இதில் 3.2 மில்லியன் சதுர அடி அலுவலகம் ஜிசிசி மையங்களுக்காகவே குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே சென்னையில் தான் இந்த அளவுக்கு ஜிசிசி மையங்களுக்கான அலுவலக இடங்கள் குத்தகைக்கு விடுக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை சென்னையில் அலுவலக இடங்களுக்கான வாடகை என்பது ஒரு மாதத்திற்கு ஒரு சதுர அடிக்கு 69.2 ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6% அதிகமாகும். பல்வேறு நிறுவனங்களும் சென்னையில் தங்கள் அலுவலகத்தை திறப்பதற்கு முன் வந்தது இதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது .
ன்னையில் குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் சந்தை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது . 2024இல் மொத்தம் 16,238 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. சென்னையில் 50 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 16 , 238 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதில் சுமார் 43 சதவீதம் அதாவது 7000 வீடுகள் 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய்க்கும் இடையிலான விலை மதிப்பு கொண்டவை .அதேபோல 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் சென்னையில் ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து இருக்கிறதாம். அதாவது 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை மதிப்பு கொண்ட ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை 2023 ஒப்பிடும்போது 2024இல் 107 சதவீதம் உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டினை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டும் சென்னையில் அலுவலக இடங்கள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது என நைட் பிராங்க் இந்தியா அமைப்பின் செயல்பாட்டு இயக்குநர் சீனிவாஸ் அனிகப்பட்டு தெரிவித்துள்ளார். இருந்தாலும் சென்னையில் அலுவலக இடங்களுக்கான தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லாமல் இருப்பது ஒரு குறை என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications