சிக்கன் பிரியாணி, நெய் பொங்கல் தான் சென்னை மக்களின் பேவரைட்.. ஸ்விக்கி-யின் கலகல ரிப்போர்ட்..!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி தனது 6வது வருடாந்திர உணவு விற்பனை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதாவது 2020 முழுவதும் ஸ்விக்கி தளத்தில் எந்த ஊர் மக்கள், எந்த உணவை அதிகம் விரும்பி சாப்பிட்டு உள்ளனர் என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 6வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான Swiggy's annual StatEATstics ரிப்போர்ட்டில் சென்னை மக்கள் ஆதிகம் சாப்பிட்ட டாப் 5 உணவுகளை வழங்கியுள்ளது.

எங்க ஊரு மெட்ராசு..

எங்க ஊரு மெட்ராசு..

நம்ம சென்னை மக்கள் இந்த வரும் ஸ்விக்கி தளத்தில் அதிகம் ஆர்டர் செய்த உணவாகச் சிக்கன் பிரியாணி விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கன் பிரியாணி மீதான மோகம் அதிகரித்து ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சிக்கின் பிரியாணி கடை உருவாகியுள்ளது, அந்த அளவிற்குச் சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்குச் சிக்கன் பிரியாணி மீதான காதல் அதிகரித்துள்ளது.

டாப் 5 உணவுகள்..

டாப் 5 உணவுகள்..

ஸ்விக்கி வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னை மக்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகள் பட்டியலில் முதல் இடத்தைச் சிக்கன் பிரியாணி பெற்ற நிலையில் அடுத்த இடத்தைச் சிக்கன் ப்ரைட் ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவை டாப் 5 இடத்தைப் பிடித்துள்ளது.

பிற முக்கிய நகரங்கள்..

பிற முக்கிய நகரங்கள்..

சென்னைக்குச் சிக்கன் பிரியாணி என்றால் பெங்களூரில் மசால் தோசா, டெல்லியில் தால் மக்கானி, மும்பையில் தால் கிச்சடி, ஹைதராபாத்தில் சிக்கன் பிரியாணி, புனேவில் பன்னீர் டிக்கா மசாலா, கூர்கானில் தால் மக்கானி, கொல்கத்தாவில் சிக்கன் பிரியாணி, ஜெப்பூரில் தால் ப்ரை, லக்னோவில் சிக்கன் பிரியாணி. சென்னையைப் போலவே ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகர மக்கள் அதிகமானோர் சிக்கன் பிரியாணியை விரும்பியுள்ளனர்.

பிரியாணி ஆதிக்கம்

பிரியாணி ஆதிக்கம்


ஸ்விக்கி தளத்தில் இந்த ஆண்டு மட்டும் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 115 பிரியாணி ஆர்டர்கள் இந்தியா முழுவதும் குவிந்துள்ளது முக்கியமான விஷயம் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்னாக்ஸ் பிரிவில் சமோசா, பாவ் பாஜி ஆகியவை இந்தியர்கள் அதிகம் விரும்பியதாகவும் டெசர்ட் பிரிவில் குலாப் ஜாமுன், ரசமலாய் ஆகியவை அதிகம் விரும்பியதாகவும் உள்ளது.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

இந்த வருடம் ஸ்விக்கி வாடிக்கையாளர்கள் ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை அதிகளவில் விரும்பி சாப்பிட்டு உள்ளனர். 2021ல் ஆரோக்கியமான உணவு பிரிவு வர்த்தகம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மக்கள் அதிகளவில் ஆரோக்கியம் சார்ந்து அக்கறைகொள்வதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+