LPG பிரச்சனை: சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.. அடுத்தடுத்து உருவாகும் பிரச்சனை.. புலம்பும் மக்கள்..!

சென்னையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் சிஎன்ஜி எரிபொருள் பற்றாக்குறை போக்குவரத்து துறையை கடுமையாக பாதித்து வருகிறது. ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் எரிவாயு நிரப்புவதற்கு மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதேபோல் பல இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்கின்றனர். மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையே இத்தகைய நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 5 வருடத்தில் சிஎன்ஜி வாகனங்களுக்கு பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டு, ஆட்டோ, கார், பைக் வரையில் சிஎன்ஜி வாகனங்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பல இடத்தில் பழைய வாகனங்களுக்கு சிஎன்ஜி மூலம் வாகனத்தை இயக்க Retrofit அறிமுகம் செய்யப்பட்டது. சிஎன்ஜி பயன்படுத்தும் பெரும்பாலான வாகனங்கள் வாடகைக்காகவும், குறைந்த செலவில் வாகனங்களை இயக்க வேண்டும் என மிடில் கிளாஸ் குடும்பங்கள் தான்.

LPG பிரச்சனை: சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு.. அடுத்தடுத்து உருவாகும் பிரச்சனை.. புலம்பும் மக்கள்

இதனால் இந்தியா முழுவதும் சிஎன்ஜி வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வேளையில் தற்போது ஏற்பட்டுள்ள CNG தட்டுப்பாடு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இதுக்குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், சென்னையில் உள்ள சிஎன்ஜி ஆட்டோக்களில் சுமார் 25 சதவீதம் ஆட்டோக்களுக்கு செவ்வாய்கிழமை கேஸ் ரீஃபில் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாநில பணி தலைவர் எஸ். பாலசுப்ரமணியம், "நிலைமை மேலும் மோசமடைந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

பெட்ரோல் ஆட்டோக்களை ஓட்டி வந்த பல ஓட்டுநர்கள் எரிபொருள் செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக எல்பிஜி-சிஎன்ஜி வாகனங்களுக்கு மாறியிருந்தனர். ஆனால் இப்போது எரிவாயு கிடைப்பது கடினமாகியுள்ளதால், பெட்ரோலுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தற்போது பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எவ்விதமான தட்டுப்பாடும் இல்லை, இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கத்தார் நாட்டில் இருந்து வரும் எரிவாயு ஹார்மூஸ் பதையில் வர வேண்டியிருப்பதால் தற்போது இது மொத்தமாக தடைபெற்றுள்ளது.

இந்த சப்ளை மற்றும் இருப்பு பிரச்சனை காரணமாக இந்தியா மற்றும் உலகளவில் எல்பிஜி விலை அதிகரித்துள்ளது. சிஎன்ஜி-க்கு அரசு நிர்ணய விலை கிலோவுக்கு ரூ.59.41 ஆக இருந்தாலும், சில தனியார் நிலையங்களில் ரூ.70-ரூ.80 வரை விற்கப்படுகிறது. அரசு நிறுவனங்களின் சிஎன்ஜி நிலையங்களிலும் விலை ரூ.64.51-க்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுடைய கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை முழுவதும் ஆட்டோ கட்டணம் உயர்ந்துள்ளது. உதாரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எக்மோர் வரை ரூ.40 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அயனாவரம் முதல் கோயம்பேடு வரை ரூ.130-ல் இருந்து ரூ.180-க்கு உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு பயணத்திற்கு 20-40 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது சென்னை மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

முன்பு ஹோட்டலுக்கான வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு, அடுத்தாக வாகனங்களுக்கான சிஎன்ஜி தட்டுப்பாடு, வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து எரிவாயு தொடர்பான சேவைகள் மற்றும் கட்டணம் உயர்ந்து வருகிறது.

எரிவாயு நிலையங்களுக்கு போதுமான சப்ளை இல்லாததால் இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது என கூறுகின்றனர். சென்னையில் 40,000 எல்பிஜி ஆட்டோக்கள் மற்றும் 20,000 சிஎன்ஜி ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆனால் எல்பிஜி விநியோக நிலையங்கள் மிகக் குறைவு. இதற்கிடையில் சப்ளை தட்டுப்பாடும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+