சென்னையைச் சேர்ந்த ஒருவர் தெருநாய்களுக்கு உணவளிக்க 'சன் ஃபீஸ்ட் மேரி லைட்' பிஸ்கட்களை வாங்கியுள்ளார். பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தான் வாங்கிய உள்ளூர் கடையில் விளக்கம் கேட்க சென்றபோது, அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
பின்னர், இதற்கான விளக்கம் கேட்டு ஐடிசி நிறுவனத்தையே நேரடியாக தொடர்பு கொண்டார். இருப்பினும், நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதில் கடுப்பான அவர் வழக்கு தொடுத்து, தற்போது வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் உள்ள எம்எம்டிஏ மாத்தூரைச் சேர்ந்த பி டில்லிபாபு என்பவர் 2021 டிசம்பர் மாதம் மணலியில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடையில் இருந்து விலங்குகளுக்கு உணவளிக்க இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கினார்.
அதில் ஒரு பாக்கெட்டில் பதினைந்து பிஸ்கட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த பிஸ்கட்-ன் ரேப்பரில் இந்த பேக்கேஜிங்கில் 16 பிஸ்கட்கள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்தன. இதற்கான விளக்கம் கேட்டு முயற்சி செய்த போது சரியான பதில் கிடைக்காத காரணத்தால் வழக்கு தொடுத்தார் டில்லிபாபு.
இந்த வழக்கில் டில்லிபாபு ஐடிசி பொது மக்களிடம் தினமும் 29 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளது என தெரிவித்துள்ளார். பிஸ்கட் பேக்கேஜிங்கில் குறிப்பிட்டுள்ளதை விட ஒரு பிஸ்கட்டை குறைவாக வழங்கி, எஃப்எம்சிஜி துறையின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ITC தினமும் 29 லட்சம் ரூபாய்க்கு மேல் பொதுமக்களை ஏமாற்றியதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு பிஸ்கட்டின் விலையும் ₹.75 என்று பி டில்லிபாபு கணக்கிட்டு தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிஸ்கட் உற்பத்தியாளரான ஐடிசி ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்கின்றனர். இதன் அடிப்படையில், அந்த நிறுவனம் பொதுமக்களிடம் தினமும் 29 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக டில்லிபாபு அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலளித்த ஐடிசி நிறுவனம், ரேப்பரில் உள்ள பிஸ்கட்டுகள், பிஸ்கட் எண்ணிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதில்ல, எடையின் அடிப்படையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிஸ்கட் பாக்கெட்டின் நிகர எடை 76 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்கட் பாக்கெட்டுகளை எடைபோட்டு பார்த்ததில் ரேப்பர் இல்லாமல் பிஸ்கட் பாக்கெட் 74 கிராம் எடை கொண்டு உள்ளது என நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்தது.
கிட்டத்தட்ட 2 வருடமாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடித்ததற்காக ஐடிசி நிறுவனம் இழப்பீடாக 1 லட்சம் ரூபாயை டில்லிபாபுவுக்கு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குறிப்பிட்ட பேட்ச் பிஸ்கட் விற்பனையை முழுமையாக நிறுத்தவும் ஐடிசி நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications