எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைப் பெரும் போராட்டத்திற்குப் பின்பு வாங்கிய நிலையில், ஒவ்வொரு நிர்வாகப் பிரிவுகளிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பது மட்டும் அல்லாமல் இந்த மாற்றத்தில் பல உயர் அதிகாரிகளை இழக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவை அனைத்தையும் எலான் மஸ்க் செய்கிறாரா..? என்றால் நிச்சயம் இல்லை. டிவிட்டரை மொத்தமாக மாற்ற எலான் மஸ்க்-கிற்கு உதவுவது சென்னை பையன் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அது தான் உண்மை.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய கையோடு முக்கியமான அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல ஊழியர்கள் தானாக முன்வந்து வெளியேறினர். இதற்கிடையில் டிவிட்டர் நிறுவனத்தைச் சுற்றியும், எலான் மஸ்க்-கை சுற்றியும் பலரின் காதுகளில் விழுந்த பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன், யார் இவர்..? டிவிட்டரில் எலான் மஸ்க் உடன் சேர்ந்து என்ன செய்கிறார் இவர்..?
ஸ்ரீராம் கிருஷ்ணன்
எலான் மஸ்க் டிவிட்டரில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும், தற்காலிகமாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் a16Z கிரிப்டோ நிறுவனத்துடன் இணைந்து செய்கிறார். இதுகுறித்து ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது டிவிட்டரில் கூறுகையில், பலருக்கும் நான் எலான் மஸ்க் மற்றும் சில சிறப்பான மனிதர்களுடன் இணைந்து டிவிட்டருக்கு உதவி செய்து வருகிறேன்.
டிவிட்டர்
உலகில் மிகவும் முக்கியமான மற்றும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிறுவனமாக டிவிட்டர்-ஐ நம்புகிறேன். இதை எலான் மஸ்க் செய்துக்காட்டுவார் எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
டிவிட்டர் சிஇஓ
டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் செய்யத் திட்டமிடும் மாற்றங்கள் அனைத்தையும் செய்யும் சிறப்புமிக்கக் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கியப் பங்கு வகிக்கிறார். இதற்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்தியர் இருந்து தற்போது சென்னைவாசி டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக உயர வாய்ப்பு உருவாகியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது. சரி யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.
சென்னை
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் லோவர் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், இவருடைய சந்தை இன்சூரன்ஸ்-ல் பணியாற்றி இருந்தார். இவருடைய மனைவி ஆர்த்தி ராமமூர்த்திக் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். 2002 யாஹூ மெசஞ்சர்-ல சந்தித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
SRM இன்ஜினியரிங் கல்லூரி
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னை SRM இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் ஐடி 2001-2005ல் முடித்துள்ளதாகத் தனது லின்கிடுஇன் தளத்தில் தெரிவித்துள்ளார். வெறும் 21 வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியைப் பெற்று அமெரிக்காவின் சியாடில் நகரத்துக்கு வந்தார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
மைக்ரோசாப்ட்
கல்லூரி படிப்பை முடிந்த உடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ப்ராடெக் அதிகாரியாக 6.5 வருடம் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து பேஸ்புக், ஸ்னாப்சாட், டிவிட்டர் (2017- 2019) ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து சொந்த முயற்சியில் பல முன்னணி நிறுவனத்தில் முதலீடு செய்தும் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
23 ஸ்டார்ட்அப் முதலீடு
இவர் முதலீடு செய்ய நிறுவனங்கள் பட்டியலில் SpaceX போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் CRED, Khatabook போன்ற இந்திய நிறுவனங்களும் உள்ளது. இதுவரை ஸ்ரீராம் கிருஷ்ணன் சுமார் 23 ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
a16z நிறுவனம்
Bitski, Hopin, Polywork போன்ற நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து ஸ்ரீராம் கிருஷ்ணன் தற்போது a16z (Andreessen Horowitz) நிறுவனத்தில் ஜெனரல் பார்ட்னர் ஆகப் பணியாற்றி வருகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications