இந்தியாவில் பழைய கார், பைக், கனரக வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு ஸ்கிராபேஜ் திட்டத்தை அமலாக்கம் செய்து விரைவில் கட்டாயமாக்க காத்திருக்கும் நிலையில் விமானப் போக்குவரத்துத் துறையிலும் இதேபோன்ற வர்த்தகம் உருவாகியுள்ளது.
அதுவும் நம்ம சென்னையில் இப்பிரிவு வர்த்தகம் சூடுபிடித்துள்ள நிலையில், இத்துறை வர்த்தகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சென்னை ஹப் ஆக மாறவும் வாய்ப்பு உள்ளது.
விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய விமானங்கள், அதிநவீன விமானங்களை முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து வாங்கி வரும் நிலையில், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் அதிகளவில் கைவிடப்பட்டு வருகிறது.
கைவிடப்பட்ட விமானங்கள்
இப்படிக் கைவிடப்பட்ட விமானங்களில் இருந்து முக்கியமான உதிரிப் பாகங்களைத் தனியாகப் பிரித்து மறுசீரமைப்புச் செய்யப்படும் விமானங்களில் பயன்படுத்தவும், அதை உலகம் விற்பனை செய்யவும் தற்போது வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை
இப்பிரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் வாய்ப்பு உள்ளது எனச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெயின்டனன்ஸ், ரிப்பேர் மற்றும் ஆப்ரேஷன்ஸ் நிறுவனமான நேனோ ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸின் போயிங் 777 விமானத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக டிஸ்மேன்டில் செய்யப்பட்டு உள்ளது. இதை நேனோ ஏவியேஷன் இந்தியா செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னையில் ஏழு விமானங்களைப் பிரித்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் பல்வேறு ஆர்டர்கள் குவிந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் பாண்டியன்.
செலவைக் குறைப்பு
கைவிடப்பட்ட விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட மற்றும் செயலில் உள்ள வணிக விமானங்களில் நிறுவப்பட்ட பயன்படுத்தப்பட்ட சர்வீசபிள் மெட்டீரியல்கள் (USMs), பராமரிப்பு செலவைக் குறைக்கும் காரணமாக உலகளவில் பிரிவுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு
இப்புதிய வர்த்தக பிரிவு மூலம் தெழில்நுட்ப பிரிவில் இருந்து ப்ளூ காலர் ஜாப் வரையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. மேலும் இப்பிரிவு வர்த்தகம் மூலம் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இனி வரும் காலக்கட்டத்தில் இந்திய விமானங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு விமானங்களும் வரும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications