சென்னையில் பெய்த மழை மக்களை மோசமான பாதிப்புக்குத் தள்ளிய நிலையில், தொழிற்துறையினர் மத்தியில் பல புதிய விவாதத்தை உருவாக்கியது. இதில் முக்கியமாக சென்னையில் தொடர்ந்து வர்த்தகம் செய்யலாமா அல்லது வேறு நகரங்களுக்கு இடம்பெயரலாமா, தமிழ்நாட்டுக்கு 2வது தலைநகரத்தை உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டது.
ஆனால் இந்தியாவில் பெரும்பாலான பெரு நகரங்களில் இயற்கை சீற்றத்தின் போதும் அதிகளவிலான பாதிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று, உதாரணமாக இந்த வருடத்தின் துவக்கத்தில் பெங்களூரில் பெய்த மழை, சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த மழையில் பல ஐடி பார்க் மழை நீரில் மிதந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சென்னையைத் தாண்டி பல நகரங்களில் சிப்காட், டைடல் பார்க் கட்டப்பட்டு வரும் காரணத்தால் சென்னையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை இனி இருக்காது. எனவே முதலீட்டு சந்தையும், வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் எனத் தொழிற்துறையினர் நம்புகின்றனர்.
தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு சிப்காட்டுக்கு மத்தியில் பொள்ளாச்சி, தேனி, தூத்துக்குடி, சூளகிரி, தர்மபுரி, கோயம்புத்தூரில் 2 டிபென்ஸ் பார்க், காட்பாடி போன்ற பல இடத்தில் புதிய சிப்காட் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாகப் பெரம்பலூர் மற்றும் திண்டிவனம் சிப்காட் முழுமையாகக் கட்டி முடிப்பதற்குள் மொத்த இடத்தையும் தைவான் நாட்டின் தோல் மற்றும் காலணி உற்பத்தியாளர்கள் தேர்வு செய்தனர்.
இதேபோல் ஓசூர் முதல் தர்மபுரி வரையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனங்கள் போட்டிப்போட்டு நிலத்தைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது. இதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி சிப்காட் பகுதியில் ஹைட்ரஜென், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி, பர்னிச்சர் துறை நிறுவனங்கள் தேர்வு செய்கிறது.
தற்போது அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது மணப்பாறை சிப்காட்-ல் டாடா குழுமத்தின் முதலீடும், துவங்கப்படும் தொழில்களும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேனி சிப்காட் பகுதியில் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தேர்வு செய்கிறது.
பூ சென் - 2,300 கோடிகள் கள்ளக்குறிச்சி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
ஹாங் ஃபூ - 1,000 கோடி ரூபாயை ராணிப்பேட்டை சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
தாமரை காலணி - 500 கோடி ரூபாயை திண்டிவனம் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
KICL - 500 கோடி ரூபாயை பெரம்பலூர் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
பெட்ரோனாஸ் - 34,000 கோடி ரூபாயை தூத்துக்குடியில் சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
சைலோனெடிக்ஸ் - 700 கோடி ரூபாயை தூத்துக்குடி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
ACME - 52,000 கோடி ரூபாயை தூத்துக்குடி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
டாடா சோலார் PV ஆலை - 4,000 கோடி ரூபாயை திருநெல்வேலி சிப்காட் முதலீடு செய்ய உள்ளது
இதேபோல் ஐடி சேவை துறைக்காகவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காகவும் டைடல் பார்க், எல்காட் ஐடி பார்க், நியோ டைடல் பார்க் ஆகியவை பெரு நகரங்கள் முதல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களிலும் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சென்னையை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்காமல் தொடர்ந்து மாநிலத்தின் பிற மாவட்டத்திலும் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications