சான் பிரான்சிஸ்கோ, துபாய்-க்கு இணையாக மாறும் சென்னை.. கழுத்து வலிக்கு மருந்து வாங்க வேண்டியது தான்..!!

தென்னிந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடையும் நகரமாகச் சென்னை இருந்தாலும், போதுமான உள்கட்டமைப்பும், மக்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகளும் இல்லை என்பது நீண்ட காலப் பிரச்சனையாகவே உள்ளது.

சென்னையின் வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் போதுமான இடம் இல்லாதது பெரும் பிரச்சனையாக இருப்பதால் புதிய முதலீடுகள் பெரும்பாலானவற்றைப் பிற மாவட்டங்களுக்குத் திரும்பிவிடப்பட்டு வருகிறது.

சான் பிரான்சிஸ்கோ,துபாய்-க்கு இணையாக மாறும் சென்னை..கழுத்து வலிக்கு மருந்து வாங்க வேண்டியது தான்..!!

ஆயினும் அடுத்தடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் சென்னையில் அலுவலகத்தைத் தொடர்ந்து திறந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகப்படியான ஆஃபீஸ் ரியல் எஸ்டேட் குத்தகை ஒப்பந்தம் செய்ததில் சென்னை முதன்மையாக உள்ளதே இதற்கு முக்கியமான சாட்சியாகும்.

இந்த நிலையில் சென்னையில் அதிகப்படியான அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கான தேவை உள்ளது. இந்த டிமாண்டை சமாளிக்கும் அதேவேளையில் இடப் பிரச்சனையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சப்ளை அதிகரிக்கத் தீர்வு High Rise Buildings மட்டுமே.

அதாவது இடப்பற்றாக்குறை பிரச்சனைக்கு மத்தியில் சென்னை நகரின் வளர்ச்சிக்குத் தேவையான அலுவலக மற்றும் குடியிருப்புகள் தேவையை உயரமான கட்டிடங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்ய முடியும். அந்த வகையில் தற்போது சென்னையில் 20 முதல் 65 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அடுத்து 10 வருடத்தில் சென்னை முழுக்க High Rise கட்டிடங்கள் ஏராளமாக இருக்கப்போகிறது, சான் பிரான்சிஸ்கோ, துபாய்க்கு இணையாக வான் அளவு உயர்வான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. சென்னையின் FSI அளவு 2 மட்டுமே, இதே விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, FSI அளவு 2 எனில் 2400 சதுரடி நிலம் இருந்தால் 4800 சதுரடி கொண்ட கட்டிடத்தை கட்டிக்கொள்ள முடியும்.

அந்த வகையில் சென்னையில் கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடங்களின் லிஸ்ட் இதுதான்.

  1. SPR சிட்டி - 65 அடுக்குமாடியில் ஒரு கட்டிடமும், 45 அடுக்குமாடியில் 5 கட்டிடமும் கட்டப்பட உள்ளது.
  2. பிரிகேட் ஷோலிங்நல்லூர் - 47 அடுக்குமாடியில் 3 கட்டிடம்
  3. காசாகிராண்ட் பெரம்பூர் - 1 x 42 Floor மற்றும் 5 x 35 Floor
  4. அப்பாசாமி அல்டீசா - 1x 40F மற்றும் 2x 20F
  5. பாஷ்யம் துரைப்பாக்கம் - 6x 33F
  6. பிரிகேட் ஐகான் - 1x 38F மற்றும் 1x 21F (IT டவர்)
  7. லீ கிம் தா ஹோல்டிங்ஸ், சிறுசேரி- 3x 35F; 27x 20-29F & 2x 12F IT டவர்
  8. காசாகிராண்ட் மேலக்கோட்டையூர்- 5x 35F
  9. பாஷ்யம் கிரவுன் - 12x 28/30F
  10. சென்னை சென்ட்ரல் ஸ்கொயர் டவர் - 1x 27F
  11. DLF டவுன்டவுன் Ph2 - 2x 25F+ (எதிர்பார்க்கப்படுகிறது)
  12. Voora Ocean - 2x 27F
  13. WTC ரெசிடென்சி - 2x 26F
  14. பிரிகேட் பெரும்பாக்கம் - 1x 25F மற்றும் 2x 20F
  15. தாஜ் அம்பா - 1x 23F (ஹோட்டல்+ குடியிருப்பு)
  16. சத்வ பெருங்குடி டோல் ஐடி பார்க் - 4x 20F
  17. காசாகிராண்ட் cloud9 sholz 19 மாடிகள் x 4-5 கட்டிங்கள்
  18. பாஷ்யம் பீக் & ஸ்ரீனிவாசா தியேட்டர் - 20 மற்றும் 18 மாடி கட்டிங்கள்
  19. காசாகிராண்டே ப்ரிம்ரோஸ் பெருங்களத்தூர் - 21f x 3 , 18f x 2
  20. L&T அவினியா இன்னோவேஷன் கேம்பஸ் - பல 16 மாடி கட்டிடம்
  21. பிரஸ்டீஜ் பல்லவ கார்டன்ஸ் - 14 மாடிகள் கொண்ட 30 கட்டிடம்
  22. TVS எலிமெண்ட்ஸ் கோவிலம்பாக்கம் - 18 தளங்கள்
  23. காசாகிராண்டே நாவலூர் - 2 திட்டங்களில் தலா இரண்டு 19 மாடிகள்
  24. ரஹேஜா கொமர்சோண்ட் பள்ளிக்கரணை - 3வது பிளாக் 16 மாடிகள்
  25. அப்பாசுவாமி பிராட்ஸ்டோன் MTP - 14 தளங்கள் x 2
  26. அப்பசுவாமி இறக்கைக்களம் 14 தளங்கள்
  27. பிரஸ்டீஜ் ஃபோரம் ஒரு OMR ~16+ மாடிகள்
  28. எலிவேட், OMR 21 மாடிகள்
  29. ஃபின்டெக் சிட்டியில் 65 மீ உயரத்தில் 16 மாடி கட்டிடங்கள்
  30. தி ஏஸ் பை ரிஸ்லாண்ட், பெருங்குடி - 4x20F
  31. எமரால்டு TVS அண்ணா நகர் - 2x 20F

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+