சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்போது, சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) வரை 15.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய மெட்ரோ பாதை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 60 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.
விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை உருவாக்கப்பட உள்ள இந்த புதிய மெட்ரோ பாதை, பெரும்பாலும் ஜிஎஸ்டி சாலையை (GST Road) ஒட்டியே செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய தனித்துவம் என்னவென்றால், இது இரட்டை அடுக்கு (Double-decker) மேம்பால வடிவத்தில் கட்டப்படும். அதாவது, முதல் அடுக்கில் ஒரு உயரமான சாலை மற்றும் அதற்கு மேல் மெட்ரோ ரெயில் ஓடும்.

இந்த வடிவமைப்பு, நிலம் வாங்குவதற்கான தேவையை குறைக்கும் வகையிலும், நகர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மெட்ரோ வசதி உருவாக்குவதற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மேலும், மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெட்ரோ திட்டத்திற்கான மொத்த 60 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் தனியார் நிலமாக உள்ளது, மீதமுள்ள 32 ஏக்கர் அரசு நிலமாக உள்ளது. பல்லாவரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள தனியார் நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விமானநிலையம் அருகே பாதுகாப்புத் துறை நிலம் இருப்பதால், அந்த நிலத்தை மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சி நடைபெறுகிறது. நிலம் வாங்கும் பணிகள், மாநில அரசு தேவையான நிதியை ஒதுக்கியதும் தொடங்கப்படும். முதலில், ஒரு நில வரைபடம் தயாரிக்கப்படும், அதன் பிறகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு நிலம் மாற்றப்படும்.
இந்த மெட்ரோ திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9,335 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முதலில் திட்டமிடப் பட்டதைவிட செலவு அதிகமாக உள்ளது. காரணம், இது இரட்டை அடுக்கு மேம்பால முறையில் உருவாக்கப்படும் என்பதாலும், தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானதாக இருப்பதாலும் ஆகும். மாநில அரசு ஏற்கனவே ஏப்ரல் 17 அன்று இந்த திட்டத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் இறுதி ஒப்புதல் இன்னும் பென்டிங்கில் உள்ளது. ஆனால், CMRL தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஆரம்ப பணிகளை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னையின் முக்கிய நீண்டதூர பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது. மெட்ரோ இணைப்பு அந்த நிலையத்திற்கு வந்தவுடன், பயணிகள் விமானநிலையம், பல்லாவரம், பெருங்களத்தூர் போன்ற முக்கிய இடங்களுக்கு நேரடியாக செல்ல முடியும். இந்த மெட்ரோ சேவை, நகர்புற ரயில், பேருந்து, மெட்ரோ போன்ற மூன்றையும் ஒரே இடத்தில் இணைக்கும் திட்டமாக அமையும். இதனால், போக்குவரத்து சிரமங்கள் குறைந்து, பயணிகள் எளிதாக மற்றும் விரைவாக நகரத்திற்குள் செல்வதற்கு சிறந்த வசதி கிடைக்கும்.
இந்த சென்னை விமானநிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ பாதை, தெற்கு சென்னையின் போக்குவரத்தை மாற்றும் முக்கிய திட்டமாக அமையும். அரசு அனுமதிகள் மற்றும் நிலம் வாங்கும் பணிகள் முடிந்தவுடன், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். இந்த மெட்ரோ இணைப்பு செயல்பாட்டுக்கு வந்தவுடன், சென்னையின் போக்குவரத்து முறை புதிய உயரத்தை எட்டும் என்பது உறுதி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications