சென்னையின் முக்கிய அடையாளமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியத் திட்டமாக இருக்கும் சென்னை மெட்ரோ திட்டத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரும் நிதியுதவி கிடைத்துள்ளது.
உலக நாடுகளில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வரும் ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) சென்னை மெட்ரோ திட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக மிகப்பெரிய தொகையைத் தற்போது கடனாக அளித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்திய அரசும் சென்னை மெட்ரோ திட்டத்தின் புதிய பாதைகளை உருவாக்குவதற்கும், சென்னை நகரின் தற்போதைய பொதுப் போக்குவரத்து அமைப்புடன் மெட்ரோ ரயில் அமைப்பை மேம்படுத்துவதற்கும் சுமார் 350 மில்லியன் டாலர் அளவிலான கடன் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் முதலீட்டுத் திட்டத்திற்கான tranche 1 loan திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் ரஜத் குமார் மிஸ்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் India Resident Mission அதிகாரி Nilaya Mitash ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
780 மில்லியன் டாலர் கடன் திட்டம்
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, tranche 1 loan திட்டத்திற்கான ஒப்பந்தம் மூலம் சென்னையில் மூன்று புதிய மெட்ரோ பாதைகளை உருவாக்க ADB ஒப்புதல் அளித்துச் சுமார் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான பல அடுக்கு நிதியுதவி திட்டத்திற்கு (MFF) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் தவணையாக 350 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
4வது பெரிய திட்டம்
இந்தியாவின் 4வது நீண்ட மெட்ரோ திட்டமாக விளங்கும் சென்னை மெட்ரோ, 5 பாதைகளில் இயக்கப்பட உள்ளது, இத்திட்டத்தின் முதல் பகுதி 2015ல் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லைன் 1, 2
தற்போது சென்னை மெட்ரோ திட்டம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரையிலான லைன் 1 அதாவது ப்ளூ லைன் 36 கிலோமீட்டர் பாதையிலும், சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான கிரீன் லைன் 25 கிலோமீட்டர் பாதையில் இயங்கி வருகிறது.
விரைவில் லைன் 3,4,5
தற்போது நீலம் மற்றும் பச்சை நிற லைன்களில் மட்டுமே மெட்ரோ சேவை இயக்கப்படும் நிலையில், விரைவில் லைன் 3,4,5 ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு இயங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ திட்டத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொண்டு வரப்படுகிறது.
கடன் திட்டம்
ஆசிய வளர்ச்சி வங்கியின் பல அடுக்கு கடன் திட்டம் மூலம் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு அளிக்கப்படும் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் சென்னை மெட்ரோ திட்டத்தின் 3,4,5 லைன்களைக் கட்ட உதவும்.
லைன் 3
சென்னை மெட்ரோ-வின் லைன் 3 சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான 10.1 கிலோமீட்டர் (கிமீ) தூரத்திற்கு, சுமார் ஒன்பது மெட்ரோ நிலையங்கள் உடன் அமைக்கப்படும்.
லைன் 4
சென்னை மெட்ரோ-வின் லைன் 4 லைட்ஹவுஸ் மற்றும் மீனாட்சி கல்லூரி இடையே 10 கிமீ நிலத்தடிப் வழித்தடத்தில் சுமார் ஒன்பது மெட்ரோ ஸ்டேஷன்கள் உடன் அமைக்கப்பட உள்ளது.
லைன் 5
சென்னை மெட்ரோ-வின் லைன் 5 இது சென்னை மொஃபுசில் பேருந்து நிலையம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் இடையே மின்சாரம், இயந்திரவியல், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு போன்ற அனைத்து கட்டமைப்புகள் அடங்கிய 31 கிமீ வழித்தடத்திற்கு அமைக்க இந்த 780 மில்லியன் டாலர் நிதி திட்டம் பயன் அளிக்கும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications