சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தில் அப்படி என்ன இருக்கு..? எந்த பகுதிகளை எல்லாம் இணைக்கிறது..?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கிய தூணாக இருக்கும் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சென்னை மெட்ரோ திட்டத்தை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு மாநகரின் உள்கட்டமைப்பை இத்திட்டம் பெரிய அளவில் மேம்படுத்தும்.

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தில் அப்படி என்ன இருக்கு..? எந்த பகுதிகளை எல்லாம் இணைக்கிறது..?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மூன்று புதிய மெட்ரோ வழித்தடங்கள் கட்டப்பட உள்ளது. இந்த 3 வழித்தடம் மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்குச் சென்னை நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கிறது.


இந்த 3 வழித்தடத்தில் மொத்தம் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.63,246 கோடியாகும். மேலும் இத்திட்டம் 2027 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்தின் கீழ் மூன்று முக்கிய வழித்தடங்கள் இருக்கும்:


வழித்தடம் 1: மாதவரத்தில் தொடங்கி SIPCOT வரை செல்லும், இந்த இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 55.8 கிலோமீட்டர். இந்த வழித்தடத்தில் மட்டும் 50 மெட்ரோ நிலையங்களை இருக்கும்.

வழித்தடம் 2: லைட்ஹவுஸிலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை அமைக்கப்படும், சுமார் 26 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ள இந்த வழித்தடத்திலும் 50 மெட்ரோ நிலையங்கள் இருக்கும்.


வழித்தடம் 3: மாதவரத்தில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை செல்லும், வழி 47 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியிருக்கும் மற்றும் 48 நிலையங்களைக் கொண்டிருக்கும்.

புதிய வழித்தடங்கள் சென்னையின் முக்கிய பகுதிகளான அடையார், கோடம்பாக்கம், SIPCOT, மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற இடங்களை இணைக்க உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் இருக்கும் வணிக இடங்கள் டெக் பார்க், தொழிற்துறை பகுதிகளையும் இணைக்க உள்ளது.

சென்னை நகரம் தொடர்ந்து விரிவடைந்து வரும் வேளையில், நகரின் போக்குவரத்தை வேகப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் இந்த மெட்ரோ திட்டம் பெரிய அளவில் பலன் அளிக்கும். இதேவேளையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்கும் சென்னைக்குமான போக்குவரத்தை மேம்படுத்த மினி பஸ் சேவைகள் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மெட்ரோ திட்டம் சென்னையின் முக்கியமான ஐடி காரிடாராக இருக்கும் சோழிங்கநல்லூர்-ஐ இணைக்கும் காரணத்தால் அதிகப்படியான பயணிகளை ஈர்க்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+