சென்னை: சென்னையின் அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக மட்டுமில்லாமல் மக்களுக்கு விருப்பமான போக்குவரத்து சேவையாகவும் மெட்ரோ ரயில் மாறி இருக்கிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணித்து உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினையாக இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவைகள் தான் மக்களுக்கு கை கொடுக்கின்றன. குறுகிய நேரத்தில் நினைத்து இடத்திற்கு சென்று சேர்க்கின்றன மெட்ரோ ரயில்கள். குறிப்பாக பீக் அவர்களில் பலரின் விருப்பமான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில்கள் மாறி இருக்கின்றன.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட அறிக்கையில் 2025ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரயிலில் 86,99,344 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 86,65,803 என இருந்து, மார்ச் மாதத்தில் 92,10,069 பேர் என அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் தான் அதிக மக்கள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக மார்ச் 7ஆம் தேதி அதிகபட்சமாக 3,45,863 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். இதில் மார்ச் மாதத்தில் மட்டும் போக்குவரத்து அட்டையை பயன்படுத்தி 9,81,849 பேரும், டோக்கனை பயன்படுத்தி 9,492 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருக்கின்றனர். குரூப் டிக்கெட்டிங் மூலம் 280 பேர், ஆன்லைன் கியூஆர் மூலம் 1,59,364 பேர், பேப்பர் கியூஆர் மூலம் 19,41,919 பேர் பயணம் செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்து 5,84,041 பேரும், பேடிஎம் மூலம் புக் செய்து 4,46,116 பேரும், போன்பே மூலம் 3,60,001 பேரும் பயணித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் கழகம் மெட்ரோ பயண அட்டை, மொபைல் கியூஆர் கோடு, வாட்ஸ்அப், பேடிஎம், போன்பே மற்றும் என்சிஎம்சி அட்டை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவீதம் சலுகை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல் மக்கள் சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் அமைப்பை பயன்படுத்தி 83000 86000 என்ற எண் மூலமாகவும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் கழகம் நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை போக்குவரத்து வசதியை வழங்கி வருவதே மக்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளது. பயணிகள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் கழகம் கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications