சென்னையில் மிக்ஜாம் புயல் மூலம் ஏற்பட்ட கனமழை காரணமாகப் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது, தாழ்வான பகுதியில் இருக்கும் வீடுகளில் தரை தளம் முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது. இதனால் கார், பைக், வீடுகள், வீடுகளில் இருக்கும் பொருட்கள் என அனைத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பல இடத்தில் கட்டுமானப் பணியிலிருந்து பல கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகில் கட்டப்பட்டு வந்த மேஸ்மென்ட் கட்டமைப்புப் பாதிக்கப்பட்டது. இப்படி டிசம்பர் மாதம் வந்தாலே ஏதாவது ஒரு பிரச்சனை சென்னைக்கும், சென்னை மக்களும் நடக்கிறது.

இத்தகைய துரதிர்ஷ்டவசமான இயற்கைப் பேரிடரில், உங்கள் வீட்டின் கட்டமைப்பு மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது வீட்டுக் காப்பீட்டுக் கொள்கை. ஆயுள் காப்பீடு நமக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் இயற்கைப் பேரிடர் பாதிப்பு அதிகம் கொண்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வீட்டுக் காப்பீட்டுக் கொள்கை அவசியமாகும்.
இயற்கைப் பேரிடரின் போது, மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு மாறுவது அல்லது சரியான உதவி வரும் போது வீட்டை விட்டு வெளியேறுவது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் நம் வீட்டைப் பாதுகாக்க நம்மால் முடியாது, இயற்கையின் சீற்றத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வழிகள் இருந்தாலும் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் அல்லது கஷ்டப்பட்டு ஈஎம்ஐ-யில் வாங்கிய வீட்டை பாதுகாக்க ஓரே வழி, ஹோம் இன்சூரன்ஸ் தான்.
வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையின் மூலம் வீட்டின் கட்டமைப்பைப் பாதுகாப்பது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் நமது உடைமைகள் இயற்கைப் பேரிடரில் அழிக்கப்பட்டாலும், காப்பீடு மூலம் அனைத்திற்கும் பாதுகாப்பு பெற முடியும்.
வீட்டுக் காப்பீட்டின் வகைகள் : ஒரு வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் காப்பீட்டு நிறுவனங்கள் விரிவான வீட்டுக் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குகிறார்கள். அதில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது,
கட்டமைப்பு/கட்டிடக் காப்பீடு
நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக் கொள்கை
தனிப்பட்ட விபத்து
பொதுப் பொறுப்புக் கவரேஜ்
வீட்டில் கொள்ளை மற்றும் திருட்டு நடந்தால் அதற்கான காப்பீடு.
வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையில் எதற்கெல்லாம் பாதுகாப்பு கிடைக்கும், அதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
பாதுகாப்பு பட்டியல்: வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையானது உங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பை அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவரேஜைப் பொறுத்து இரண்டையும் பாதுகாப்பு கிடைக்கும்.
Home Insurance Policy-யில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் உங்கள் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். ஹோம் இன்சூரன்ஸ் பாலிசிக்கு அனைத்து காப்பீட்டாளர்களும் வழங்கும் நிலையான பாதுகாப்பு
நெருப்பு, மின்னல், விமானச் சேதம், வெடிப்பு, புயல், சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு/பாறை சரிவு, தண்ணீர் தொட்டி வெடிப்பு, ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடரில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications