ஒரு வீட்டை வாங்குவது என்பது உங்கள் வாழ்நாள் கனவு என்பதைத் தாண்டி, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும், அதற்காக நீங்கள் வீட்டுக் கடன் வாங்கலாம் அல்லது பணத்தைப் பல வகையில் திரட்டி வீட்டை வாங்கியிருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சொந்த வீடு என்பது உங்களுடைய மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று. எனவே, இயற்கைப் பேரிடரில், உங்கள் வீட்டின் கட்டமைப்பு மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களுக்குப் பாதுகாக்கக் கட்டாயம் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். குறிப்பாக இயற்கைப் பேரிடர் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக் காப்பீட்டுக் கொள்கை தேர்வு செய்வது சிறந்தது.

இப்போது ஆன்லைனிலேயே வீட்டுக் காப்பீட்டை வாங்கும் வசதிகள் இருந்தாலும் நீங்கள் ஒரு வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன், வீட்டுக் காப்பீட்டுத் தொகையை எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரீமியம் மதிப்பீடு: வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் ப்ரீமியம் தொகை வீட்டின் மதிப்பைப் பொருந்து மாறுபடும். கட்டிடத்தின் மதிப்பு, கட்டுமானத்தின் இடம், கட்டுமானத்திற்கான செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்புக் கணக்கிடப்படும். இதேபோல் வீட்டில் இருக்கும் பொருட்கள் அடிப்படையிலும் ப்ரீமியம் தொகை மாறும்.
பொதுவாக இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வீட்டு காப்பீடுகளும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து தான் இன்சூரன்ஸ் வழங்குகிறது.
தற்போது சந்தையில் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் இருப்பின், மேலும் இந்த வீட்டு கட்டப்பட்டு 5 வருடத்திற்குக் குறைவாக இருப்பின் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் வருடாந்திர ப்ரீமியம் 892 ரூபாயில் இருந்து 1300 ரூபாய் அளவில் உள்ளது.
இந்த ப்ரீமியம் தொகை வீட்டின் வயது, காப்பீடு நிறுவனம், நாம் தேர்வு செய்யும் பாலிசி, Add-on சேவைகள், கடைசியாக ஜிஎஸ்டி வரியும் சேர்த்து மாறுபடும். எனவே சந்தையில் இருக்கும் பல்வேறு நிறுவனத்தின் ஹோம் இன்சூரன்ஸ் திட்டத்தை ஆய்வு செய்து, திட்டத்தில் கொடுக்கப்படும் பாதுகாப்புகள், எந்த நேரத்தில் எல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, ஹோம் இன்சூரன்ஸ் திட்டத்தில் இருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் படித்துப் புரிந்துகொண்டு அல்லது ஆலோசனை கேட்ட பின்பு ஹோம் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.

சென்னையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு 10 வருடத்திற்கான ஹோம் இன்சூரன்ஸ் தொகையைக் கணக்கிடும் போது மாதம் 195 ரூபாயும், மொத்த 10 வருட காலத்திற்கு 23,364 ரூபாயாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு பிரியாணி செலவில் உங்க வீட்டை பாதுகாக்கலாம், ஏற்கனவே கூறியது போல், மேலே கொடுக்கப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் ப்ரீமியம் தொகை மாறலாம்.


Click it and Unblock the Notifications