தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சென்னை, கோயம்புத்தூர் மிகவும் முக்கியமானதாக மாறி வரும் வேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க பணியாளர்களையும், கட்டமைப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமாயின் சிறப்பான சப்ளை செயின் அவசியம், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதாக இருந்தாலும் சரி, உற்பத்தி செய்ய பொருட்களைப் பெறுவதாக இருந்தாலும் சரி. அந்த வகையில் மத்திய தமிழக பகுதிகளை குறித்து ஒரு திட்டமும், சென்னை உற்பத்தி பகுதியைக் குறி வைத்து ஒரு திட்டமும் தமிழ்நாடு அரசு தீட்டியுள்ளது.

தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சி, தொழில் மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை தேசிய மற்றும் உலகளாவில் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் வலுவான மற்றும் திறன்மிக்க லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பின் அவசியமானதாக உள்ளது.
இந்த முக்கிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் (MMLP) அமைக்கவும், மாநிலத்தின் உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இது விளங்கும் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை துறைமுக கழகம், ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட், தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக் மேலாண்மை லிமிடெட் (NHLML) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆகியவை இணைந்து "சென்னை MMLP பிரைவேட் லிமிடெட்" என்ற சிறப்பு நிறுவனம் (special purpose vehicle) மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 183 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,428 கோடி செலவில் பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை உருவாக்கி வருகின்றன.
இந்த திட்டம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள வாகன உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள் அருகே முக்கியமான இணைப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், கோவை கரவள்ளி பகுதியில் மற்றொரு பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை MMLP-ன் முதல் கட்டம் 2026-க்குள் முடிவடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் பொருட்களின் சேமிப்பு மற்றும் சாலை, ரயில், விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகிய போக்குவரத்து வலைப்பின்னல்கள் மூலம் தடையற்ற போக்குவரத்தைச் சாத்தியமாக்கும். இதன் மூலம், விநியோக சங்கிலிகள் திறன்மிக்க மற்றும் செலவு குறைவானதாக இருக்கும்.
பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் என்றால் என்ன?: பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் என்பது பெரிய அளவிலான சரக்கு போக்குவரத்து வளாகங்கள் ஆகும். இதில் சாலை, ரயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய பல்வேறு போக்குவரத்து முறைகளுக்கான இணைக்கும் மைய புள்ளியாக இருக்கும்.
இதன் மூலம், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை எளிதாகவும், வேகமாகவும், திறன்மிக்க வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உற்பத்தி பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும்.
பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களின் நன்மைகள்: இதன் முக்கியமான நன்மை என்றால் போக்குவரத்து செலவு குறைப்பு, போக்குவரத்து நேரம் குறைப்பு, மேம்பட்ட விநியோக சங்கிலி கட்டமைப்பை உருவாக்க முடியும்
செலவு குறைப்பு: பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் வசதிகள் இருப்பதால், குறைந்த தூரத்திற்குச் சாலை போக்குவரத்தையும், நீண்ட தூரத்திற்கு ரயில் அல்லது கப்பல் போக்குவரத்தையும் தேர்வு செய்ய முடியும். இதன் மூலம் போக்குவரத்து செலவைக் குறைக்க முடியும்.
நேரம் சேமிப்பு: பொருட்களை ஒரு போக்குவரத்து முறையிலிருந்து மற்றொரு போக்குவரத்து முறைக்கு மாற்றுவதற்கான நேரத்தைக் குறைக்கிறது. இதேபோல் தொலைவைப் பொருத்து போக்குவரத்து முறையை எளிதாக தீர்மானித்துக்கொள்ள முடியும்.
திறன்மிக்க விநியோக சங்கிலி (Supply Chain): அனைத்து விதமான போக்குவரத்து முறையும், ஓரே இடத்தில் கிடைக்கும் பட்சத்தில் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், தங்களுக்குத் தேவையான போக்குவரத்து முறையை எளிதாகத் தேர்வு செய்து வேகமாகப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும்.
வேலைவாய்ப்புகள்: பல்வகை லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளுக்காக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications