தமிழ்நாடு நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறையின் உற்பத்தி ஹப் ஆக மாறி வருகிறது, ஏற்கனவே நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்தும், குறிப்பாக சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறைக்கு அடுத்த மகுடமாக நாட்டின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியம் 1800 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராகியுள்ளது.
சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சோஜிட்ஸ் மோதர்சன் தொழில்துறை பூங்காவில், சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க மோதர்சன் எலக்ட்ரானிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மோதர்சன் குழுமம் சுமார் 12 துறையில் இயங்கி வரும் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாகும், உலகம் முழுவதும் பல துறையை சேர்ந்த நிறுவனங்களுக்குத் தயாரிப்புகளையும், சேவைகளையும் அளித்து வருகிறது Motherson குரூப். தற்போது 67 வயதான விவேக் சாந்த் ஷெகல் மதர்சன் குரூப்பின் தலைவராகவும் இணை நிறுவனராகவும் உள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களில் விவேக் சாந்த் ஷெகல் மிகப் பெரிய பணக்காரராக ஆவார்.
Motherson குரூப் பெயருக்கு பின்னால் சுவாரஸ்யமான கதை உண்டு, 1975 ஆம் ஆண்டில், விவேக் சாந்த் ஷெகல் தனது மறைந்த தாயார் ஸ்வரன் லதா ஷெகலுடன் இணைந்து வெள்ளி வர்த்தகத்தில் பெரும் வெற்றியை கண்டார். பின்னாளில் இந்த தாய் மகன் வெற்றி கூட்டணி Mother-son சாம்ராஜ்ஜியமாக மாறி இந்த பெயர் மிகப் பிரபலமானது.
ஸ்ரீபெரும்புதூரில் சோஜிட்ஸ்-மோதர்சன் தொழில்துறை பூங்கா (Sojitz-Motherson Industrial Park - SMIP) இந்தியாவில் உள்ள முதல் ஜப்பான் தொழில்துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட பொது தொழில்துறை பூங்காவாகும். இது காஞ்சிபுரத்தில் சென்னையின் புறநகரில் 300 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
இந்த தொழில்துறை பூங்கா காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கடிவாக்கம் & மும்மல்பட்டு கிராமங்களில் அமைந்துள்ளது. இது சென்னை-பெங்களூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH4-க்கு 2.7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் ஏராளமான ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்த பூங்காவில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த பூங்கா பிளக் அண்ட் பிளே உள்கட்டமைப்பு மாதிரியைத் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications