சென்னை மக்களின் 18 ஆண்டு கால கனவு நிறைவேற போகுது!! தெற்கு ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்!!

சென்னை மற்றும் புறநகர்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலைக்கு சென்று வருவதற்கும், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கும் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்து மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில்கள்.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு வரையிலும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரையிலும் மின்சார வேலைகள் மற்றும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொருபுறம் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் உள்ளிட்ட பாதைகளில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மக்களின் 18 ஆண்டு கால கனவு நிறைவேற போகுது!! தெற்கு ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்!!

காலை 4.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை எப்போது பார்த்தாலும் இந்த ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஏனெனில் இந்த வழித்தடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் பேருந்து , ஆட்டோ உள்ளிட்ட அவற்றை தவிர்த்து அதிகமாக பயன்படுத்துவது ரயில் போக்குவரத்துதான்.

இதில் குறிப்பாக சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி இடையிலான எம்ஆர்டிஎஸ் எனப்படும் பறக்கும் ரயில் சேவை 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . முதலில் சென்னை கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை தொடங்கப்பட்ட இந்த சேவை பின்னர் வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த பறக்கும் ரயிலில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் பணிகள் முடிந்து ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுவிட்டது. பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து இருக்கிறது.

சென்னை மக்களின் 18 ஆண்டு கால கனவு நிறைவேற போகுது!! தெற்கு ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்!!

அதாவது வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை இடையிலான ரயில் வழித்தடத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஒப்புதல்கள் பெறப்பட்டு விட்டன எனவே ஒரு மார்ச் 10ஆம் தேதியிலிருந்து இந்த வழித்தடத்தில் ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது.

தற்போது தாம்பரம் கடற்கரை இடையிலான வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. 204 ரயில்கள் இயக்கப்பட்ட இடத்தில் 115 ரயில்கள் தான் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் பரங்கி மலை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை பெரிய நிவாரணம் தந்திருக்கிறது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரையிலான ரயில் சேவைகள் பாதி அளவுக்கு குறைக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு பரங்கிமலை வந்து அங்கிருந்து எம்ஆர்டிஎஸ் ரயிலில் கடற்கரை வரை செல்லலாம். இது பயணிகளுக்கு பெரிய நிவாரணத்தை தரும்.

இதற்கிடையே ரயில்கள் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் தெற்கு ரயில்வே ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தாம்பரம் முதல் பீச் ஸ்டேஷன் வரை காலை 6.40 முதல் 9.40 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+