சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூடிய விரைவில் 2000 ரூபாய் மதிப்பிலான மாதாந்திர பாஸ்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னை நகருக்குள் சென்னை போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு மாதாந்திர பாஸ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த பாஸ்களை கொண்டு அனைத்து வகையான பேருந்துகளிலும் நாம் பயணம் செய்து விட முடியாது. இந்த நிலையில் தான் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஏசி உள்பட அனைத்து வகையான மாநகர பேருந்துகளிலும் மாதாந்திர பாஸ்களை கொண்டு பயணம் செய்யக் கூடிய வகையில் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

சென்னை போக்குவரத்து கழகம் வரும் மே மாதத்திலிருந்து புதிதாக 225 ஏசி மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது. ஏசி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் அதற்கேற்ற வகையில் புதிய பாஸை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது 1000 ரூபாய் செலுத்தி மாதாந்திர பாஸ்களை பெற்றுக் கொள்ளும் நபர்கள் ஏசி அல்லாத டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் மற்றும் சாதாரண பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்.
இதுவே புதிதாக கொண்டுவரப்பட இருக்கும் மாதாந்திர பாஸ் திட்டத்தில் 2000 ரூபாய் செலுத்தி பாஸ் பெற்றுக் கொண்டால் ஏசி பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். பெரும்பாலும் ஐடி காரிடார்கள் இருக்கும் பகுதிக்கு தான் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோடை காலமும் தொடங்க இருப்பதால் ஏசி பேருந்துக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் தான் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இப்படி ஒரு முடிவினை எடுத்து இருக்கிறது.
இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் இந்த புதிய பாஸ் பெற்ற நபர்கள் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் செல்லக்கூடிய அனைத்து வகையான மாநகரப் போக்குவரத்து பேருந்திலும் பயணம் செய்யலாம் என கூறியிருக்கிறார். தற்போது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 3,056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன இவற்றில் 50 பேருந்துகள் ஏசி பேருந்துகளாக இருக்கின்றன என கூறியுள்ளார்.
கூடிய விரைவில் புதிதாக அரசு 650 மின்சார ஏசி பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவிருக்கிறது போக்குவரத்து கழகம. அதில் 225 ஏசி பேருந்துகள் வரும் மே மாதத்தில் இருந்தே மாநகரில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனவே தான் இந்த 2000 ரூபாய் மாதாந்திர பாஸ் திட்டத்தை கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாதந்தோறும் 65,000 முதல் 75,000 வரை மாதாந்திர பாஸ் திட்டத்தின் மூலம் பெறுகிறது.
2000 ரூபாய் பாஸ் திட்டம் அறிமுகமானால் இந்த வருமானம் இன்னும் அதிகரிக்கும். இது தவிர ஸ்மார்ட் கார்டு மூலம் மாதாந்திர பாஸ் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறுகின்றனர் அதிகாரிகள்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications