இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தான் உள்ளது, அதிலும் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்புக்கு அடிப்படையான செமிகண்டக்டர் சிப்-ன் உள்நாட்டுத் தயாரிப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பெரிய அளவில் ஊக்குவித்து வரும் வேளையில் இத்துறையில் நுழைய தனியார் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது.
இதன் வாயிலாக ஏற்கனவே அமெரிக்காவின் மைக்ரான் முதல் பல உள்நாட்டு நிறுவனங்கள் செமிகண்டக்டர் சிப்-க்கான OSAT எனப்படும் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைத்து வரும் வேளையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குழுமம் செமிகண்டக்டர் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக முருகப்பா குழுமம் 2020ல் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்த CG Power and Industrial Solutions நிறுவனத்தின் வாயிலாகச் செமிகண்டக்டர் துறையில் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைக்க அடுத்த 5 வருடத்திற்கு 791 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்தப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட CG Power and Industrial Solutions நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 20 சதவீதம் உயர்ந்து 469 ரூபாயாக உயர்ந்தது. தற்போது முருகப்பா குழுமம் செமிகண்டக்டர் துறையில் இறங்குவது குறித்தும் இத்துறைக்கு மத்திய அரசு கொடுக்கும் மாணியம் தொடர்பாகவும் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சகத்திடம் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
முருகப்பா குழுமம் செமிகண்டக்டர் துறையில் இறங்குவதற்காக அறிவிக்கப்பட்ட 791 மில்லியன் டாலர் அதாவது 6600 கோடி ரூபாய் முதலீட்டை கூட்டணி நிறுவனத்தின் வாயிலாகவும், பங்குகள், கடன்கள் வாயிலாகவும் திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் OSAT தொழிற்சாலை-க்கான டெக்னாலஜி பார்ட்னர்-ஐ தேடும் பணிகளைத் துவங்கியுள்ளதாகவும் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டர் சிப் தற்போது ஹெட் போன் முதல் கார் தயாரிப்பு வரையில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, சமீபத்தில் ஓப்பன்ஏஜ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் ஏஐ தொழில்நுட்பத்திற்காகப் புதிய சிப் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதற்காகத் தனி நிறுவனத்தையும், முதலீட்டையும் பெற முடிவு செய்துள்ளார்.
பொதுவா செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் 3 நிலை உள்ளது, 1. டிசைன், 2. ஃப்ரிகேஷன், 3.அசம்பிளி மற்றும் டெஸ்டிங். இதில் ஃப்ரிகேஷன் தான் அதிகப்படியான முதலீடு, தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படுபவை. தற்போது இந்திய நிறுவனங்கள் அனைத்தும் டாடா குழுமத்தையும் சேர்த்து டார்கெட் செய்வது அசம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) தான்.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறை 2026ல் சுமார் 63 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், இத்துறை வர்த்தகத்தைக் கைப்பற்ற சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமம் இறங்கியுள்ளது.
1940 முதல் இயங்கி வரும் முருகப்பா குழுமம் டியூப், சைக்கிள், விவசாய உரம், கெமிக்கல், சர்க்கரை, நிதி சேவைகளில் மட்டுமே இருந்த நிலையில் 1990 முதல் பல புதிய துறையில் இறங்க முடிவு செய்து ஐடி, மின்சாரம், ஆட்டோமொபைல், டெலிகாம் என நுழைந்து அசத்திய வருகிறது. மேலும் அடுத்தத் தலைமுறை தலைவர்களின் சிறப்பான நிர்வாகத்தின் கீழ் தற்போது செமிகண்டக்டர் துறையிலும் இறங்க முயற்சி செய்கிறது.


Click it and Unblock the Notifications