ஒரு காலத்தில் சர்வதேச மொபைல் சந்தையை மடித்து தனது பாக்கெட்டுக்குள் வைத்திருந்த நோக்கியா, இப்போது ஸ்மார்ட்போன் விற்பனை கடலில் வலைவீசி தேட வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் டெலிகாம் கருவிகள் தயாரிப்பிலும் விற்பனையிலும் நோக்கியா தான் டாப்பு.
பின்லாந்து நாட்டின் தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலை சுமார் 7 மில்லியன் அதாவது 70 லட்சம் கருவிகளை உற்பத்தி செய்து புதிய மைல்கல்-ஐ எட்டியுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உலகளவில் டெலிகாம் கருவிகள் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நோக்கியா-வின் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று நம்முடைய சென்னை-யில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் தற்போது 5G புதிய ரேடியோ (5G NR), 5G MIMO கருவிகள், 4G/LTE ரேடியோக்கள் மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.
இதில் ரேடியோ கருவிகள் என்பது டெலிகாம் சேவை, மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு முக்கிய கருவி. இந்த கருவிகள் தான் நமக்கு 4ஜி, 5ஜி சேவைகளை அளிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதில் அடிப்படையாகும். இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவகளை செயல்படுத்துவதில் நோக்கியாவின் பங்கு மிகவும் முக்கியமானது.
மேலும் நோக்கிய தனது சென்னை தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நோக்கிய தனது சென்னை தொழிற்சாலையில் இருந்து ஏறத்தாழ 50% உற்பத்தியை ஏற்றுமதி செய்வதாக கூறுகிறது. 5G உபகரண உற்பத்தியில் பயன்டுத்தும் உதிரிபாகங்கள் அதிகளவில் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உள்ளூர்மயமாக்கல் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என தெரிகிறது.
இந்திய திறமைகளுக்கு சான்று தான் நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை என நோககியாவின் உலகளாவிய உற்பத்தி மற்றும் EMS நிர்வாகத்தின் தலைவர் டீமு டோவியானென் கூறுகிறார். இந்தியாவில் முதன் முதலில் 5G NR கருவியை தயாரிப்பதில் இருந்து இப்போது 5G மேஸ்ய்வ் MIMO கருவிகள் மற்றும் போக்குவரத்து நெட்வொர்க் கருவிகள் வரையில் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளோம் என டீமு தெரிவித்தார்.
மேலும் சென்னை தொழிற்சாலை காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் தயாரிக்கும் மின்சாரம் மூலம் இயங்குகிறது. இந்த தொழிற்சாலை சுமார் 81% வரையிலான பசுமை மின்சாரத்தை பயன்டுத்துகிறது, 2025 ஆம் ஆண்டுக்குள் 100% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நோக்கியாவின் இந்திய விற்பனையில் சுமார் 327 சதவீதம் உயர்ந்து 853 மில்லியன் யூரோ பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது வெறும் 200 மில்லியன் யூரோவாக இருந்தது. நோக்கியா 5ஜி சேவைக்காக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உடன் ஒப்பந்தம் செய்து 5ஜி டெலிகாம் கருவிகளை வாங்க உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications