புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஒரு படிக்கு மேல் தான், அந்த வகையில் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையை தற்போது நீண்ட கால திட்டமிடலுக்கு பின்பு பேருந்துகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பல்லாவரம் பேருந்து நடத்துனர்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் புதிய கையடக்கக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த டச் ஸ்கிரீன் சாதனங்கள், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தையும் தேர்வு செய்து நடத்துனர் டிக்கெட் கொடுப்பார். இந்த கருவியில் தேவையான தகவல் வழங்கப்பட்டவுடன், பணம், கார்டுகள் மற்றும் UPI உள்ளிட்ட பல்வேறு கட்டண விருப்பங்களுடன் கட்டணம் பெறப்பட்டு டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு இதை சோதனை திட்டமாக செயல்படுத்த உள்ள நிலையில் அதன் வெற்றி, பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த கருவியில் டிக்கெட் பெற UPI பயன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், QR-குறியீடு திரையில் காட்டப்படும், பயணிகள் தங்கள் போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தாலம். தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) அனைத்து MTC பேருந்துகளுக்கும் QR அடிப்படையிலான டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டமைப்பின் கீழ், பயணிகள் மொபைல் செயலியைப் பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்துக்கொண்டு பேமெண்ட் செய்ய முடியும். இந்த செயலிலையை MTC பேருந்துகளில் தவிர சென்னை மெட்ரோ ரயில் மற்றும் உள்ளூர் ரயில்கள் பயணிக்க பயன்படுத்தலாம்.
இந்த பொதுவான டிக்கெட் முறையின் மூலம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (Cumta) பெறும் வருவாய் MTC மற்றும் CMRL மற்றும் தெற்கு ரயில்வே போன்ற பிற போக்குவரத்து அமைப்புகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.


Click it and Unblock the Notifications