சென்னை: சென்னையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.9 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவு உயர்வு என ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனமான Colliers வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த 2.9 மில்லியன் சதுர அடி அலுவலக பரப்பளவில் 60% அலுவலகங்கள் பல்லாவரம் துரைப்பாக்கம் மண்டலத்திலும் ஓஎம்ஆர் மண்டலத்திலும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது சென்னையில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் அளவு மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் ஓஎம்ஆர் மண்டலத்தில் இருக்கும் ஓசோன் டெக் பார்க்கில் 6.9 லட்சன் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில் அமைந்திருக்கும் கேப்பிட்டல் லேண்ட் ஐடிபிசியில் 4.65 லட்சம் சதுர அடி பரப்பளவு இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஸ்டேட் ஸ்ட்ரீட் நிறுவனம் இதே கட்டிடத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
இந்தியாவில் பெங்களூரு, சென்னை , டெல்லி என்சிஆர் உள்ளிட்ட 7 முன்னனி நகரங்களிலும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுப்பது அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலும் ஒப்பிடும்போது 15% அதிகரித்திருப்பதாகவும் மொத்தம் 15.9 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்கள் லீசுக்கு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் பெங்களூர் மற்றும் டெல்லி என் சி ஆர் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கின்றன.
அதே வேளையில் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவின் ஏழு பிரதான நகரங்களில் அலுவலக இடங்களுக்கான வாடகை மதிப்பும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 8% வரை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஐடி நிறுவனங்களே பெரும்பாலான இடத்தை லீசுக்கு எடுத்துள்ளன. அடுத்ததாக பைனான்ஸ் மற்றும் காப்பீடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் , பொறியியல் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களும் கணிசமான அளவு இடத்தை குத்தகைக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நகரத்தில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படுவது அதிகரிக்கிறது என்றால் அங்கே புதிதாக நிறுவப்படும் அலுவலகங்களின் எண்ணிக்கை உயர்கிறது, ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என அர்த்தம். இதன் மூலம் இந்த நகரங்களில் எல்லாம் வேலைவாய்ப்புகள் உயர்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications