இந்தியாவில் எப்படி புதிய வீடுகள் விற்பனை மிகவும் முக்கியமோ, இதைவிடவும் முக்கியம் அலுவலக ரியல் எஸ்டேட். காரணம், அதிகப்படியான வேலைவாய்ப்புகள், வர்த்தகம் உருவாக்கப்படுவதை அலுவலக ரியல் எஸ்டேட் வர்த்தக வளர்ச்சியைக் கொண்டு எளிதாகக் கணக்கிட முடியும்.
2024 நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் அலுவலக இட செயல்பாடுகள் மந்தமாகவே இருந்துள்ளது எனப் பிரபல ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான ANAROCK தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிய அலுவலகங்கள் நாள்தோறும் திறக்கப்பட்டாலும், சந்தையில் காலியாக இருக்கும் அலுவலக இடங்கள் அதிகமாகவே உள்ளது.

2024 நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் மொத்த அலுவலக இடங்களின் ஒப்பந்தம் மற்றும் நிறைவு பெற்ற இடங்கள் அளவீடு ஆகிய இரண்டும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மந்தமான நிலையில் உள்ளது என ரியல் எஸ்டேட் அமைப்பான ANAROCK தெரிவித்துள்ளது.
நாட்டின் டாப் ஏழு நகரங்களில் புதிய அலுவலக விநியோகம் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மேலும் நிகர அலுவலகப் பயன்பாடு அல்லது ஒப்பந்தம் அளவு முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் 1 சதவிகிதம் அளவிற்குக் குறைந்துள்ளது என ANAROCK தெரிவித்தது.
இதில் முக்கியமான விஷயம், நாட்டின் டாப் 7 நகரங்களில் சராசரி வாடகை அளவு 7 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் நாட்டின் 7 நகரங்களில் கிரேடு A அலுவலக வாடகை மாதத்திற்குச் சராசரியாக ஒரு சதுரடிக்கு 83 ரூபாய் என்று ANAROCK ஆராய்ச்சித் தரவு குறிப்பிடுகிறது. இது 2023 ஆம் நிதியாண்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.77.5 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் சென்னையில் அதிகப்படியாக வாடகை அளவு 10 சதவீதம் உயர்ந்து ஒரு சதுரடிக்கு 62 ரூபாயில் இருந்து 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத்-ல் அலுவலக வாடகை இதே காலகட்டத்தில் 8 சதவீதம் உயர்ந்து 61 ரூபாயில் இருந்து 66 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பெங்களூர், புனே, கொல்கத்தா ஆகியவை தலா 7 சதவீதம் அளவில் வாடகை அதிகரித்துள்ளது. மும்பை மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியில் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications