பெங்களூரில் பெரும் சரிவு.. சென்னை டாப்பு டக்கர்..! ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் வளர்ச்சி..!

இந்தியாவில் வீடுகள் விற்பனை தொடர்ந்து சீராக இருந்தாலும் கடந்த 6 மாதத்தில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் வீடுகளின் விற்பனை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 1 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் அலுவலக குத்தகை இடம் அதாவது Office space leasing 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் வீடுகளின் விற்பனை 1 சதவீதம் சரிய முக்கிய காரணமாக ஆர்பிஐ வட்டி விகித உயர்வு உள்ளது. ரெப்போ விகித உயர்வினால் வீட்டுக் கடன் வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது, ஆயினும் 1 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.

பெங்களூரில் பெரும் சரிவு.. சென்னை டாப்பு டக்கர்..! ரியல் எஸ்டேட் துறையில் மாபெரும் வளர்ச்சி..!

மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் புதிய வீட்டு விலைகளின் விலை சுமார் 2 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. மேலும் இக்காலக்கட்டத்தில் வாடகை வீட்டுகளை டிமாண்ட் அதிகரிப்பு காரணமாக வாடகையும் அதிகரித்துள்ளது. இதனாலேயே ஹோம் லோன் வட்டி அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என சொந்து வீடு வாங்கியவர்களும் உள்ளனர்.

பெங்களூரு, மும்பை, புனே, அகமதாபாத், டெல்லி - என்சிஆர், ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ரியல் எஸ்டேட் சந்தை நிறுவனமான Knight Frank India ஆய்வு செய்து இந்த தரவுகளை வெளியிட்டு உள்ளது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அலுவலக குத்தகை இடம் அதாவது Office space leasing 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்றியதால் பலர் தங்களுடைய அலுவலகங்களை மூடினர்.

ஆனால் கடந்த சில மாதகங்களாக Work From Home ரத்து செய்யப்பட்டு பலர் புதிய அலுவலகத்திற்கும், அலுவலக விரிவாக்கத்தையும் செய்துள்ளனர். ஏன் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், அக்சென்சர் ஆகியவை பெங்களூர் அவுட்டர் பகுதிகளில் அலுவலகத்தை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் வீடு விற்பனை மற்றும் அலுவலக குத்தகை ஆகிய இரண்டும் சரிந்துள்ளது. வீடுகளின் விற்பனை 26,677-ல் இருந்து 26,247 ஆக சரிந்து 2 சதவீத பாதிப்பை எதிர்கொண்டது, அதே நேரத்தில் அலுவலக குத்தகை 7.7 மில்லியன் சதுர அடியில் இருந்து 7 மில்லியன் சதுர அடியாக 10 சதவீத சரிவை எதிர்கொண்டது.

இதுவே சென்னையில் வீடு விற்பனை மற்றும் அலுவலக குத்தகை ஆகிய இரண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் வீடுகளின் விற்பனை 6,951-ல் இருந்து 7,150 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அலுவலக குத்தகை 7.7 மில்லியன்2.2 சதுர அடியில் இருந்து 4.5 மில்லியன் சதுர அடி என 2 மடங்கு தடாலடி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+