சென்னையில் மிக்ஜாம் புயலால் உருவான கனமழையில் ஐடி பார்க் முதல் தொழிற்சாலைகள் வரையில், டெலிகாம் சேவையில் இருந்து பால் சேவை வரையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மறக்க முடியாதது. இந்த மோசமான காலகட்டத்தில் பலர் சென்னை எப்படி நீண்ட தொழில் நகரமாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
இதில் குறிப்பாக டிவிஎஸ் கேப்பிடல் பண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் கோபால் டிவிட்டரில் மிக்ஜாம் புயலில் மோசமான நகர நிர்வாகத்தின் செயல்பாடுகள் மூலம் சென்னையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் தொடர்வதில் இருக்கும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

சென்னையில் இப்போது மின்சாரம் இல்லை, இண்டர்நெட் இல்லை, டெலிகாம் சேவை இல்லை, இதனால் ஊழியர்களால் வொர்க் ப்ரம் ஹோம் செய்யச் சாத்தியமில்லை. சென்னை ஒரு பெரிய GCC மற்றும் IteS ஹப் ஆக இருக்கும் வேளையில், தொடர்ந்து சென்னை ITeS/IT துறையின் GCC ஹாப் ஆக நம்புவதற்குக் கேள்வி எழுப்புகிறது எனப் பதிவிட்டார்.
ஆனால் இன்று நிலைமையே வேறு, ஒட்டுமொத்த இந்திய ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறையில் சென்னை தான் டாப்பாக உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வட இந்தியாவில் கொண்டாடப்படும் மும்பை, டெல்லி என்சிஆர் பகுதிகளையும், தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத் நகரங்களையும் ஓடவிட்டுச் சென்னை முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஒலிம்பியா குரூப் இணை நிர்வாக இயக்குனரான சந்திரகாந்த் கன்காரியா கூறுகையில் இந்த வருடம் ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சியல் இருக்கும் ஒரே நகரம் சென்னை தான் எனத் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 6.5 மில்லியன் சதுரடி பரப்பளவிலான அலுவலக இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. இது 2022 மொத்த அளவை காட்டிலும் அதிகம். நாட்டின் மொத்த ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறை தேவையில் சென்னை மட்டுமே 15 சதவீதம் தீர்த்துள்ளது.
மேலும் எந்தொரு நகரத்திலும் இல்லாத வகையில் சென்னையில் ஐடி சேவை துறை மட்டும் அல்லாமல் வங்கி, லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி, இன்ஜினியரிங், SAAS, GCC நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்துள்ளது.
ஆனால் பெங்களூரில் ஸ்டார்ட்அப் மற்றும் ஐடி நிறுவனங்கள் மட்டுமே அலுவலகத்தை அமைத்துள்ளது. ஹைதராபாத்தில் எம்என்சி மற்றும் பார்மா மட்டுமே உள்ளது. நீண்ட கால வளர்ச்சிக்கு diversified எனப்படும் பன்முகத்தன்மை அவசியம் பாஸ்.
இப்போ சொல்லுங்க சென்னையை விட்டு போகணுமா..?


Click it and Unblock the Notifications