சென்னையில் மக்கள் எளிமையாக அரசு பேருந்து ,மின்சார ரயில், மெட்ரோ ரயில் ,ஆட்டோ , டாக்ஸி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே செயலி வாயிலாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு சென்னை ஒன் என்ற ஒரு செயலியை அறிமுகம் செய்தது.
சென்னை ஒன் செயலி உங்களுடைய போனில் இருந்தால் போதும் பேருந்தில் ஏறினால் நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டாம், இந்த செயலியில் புறப்படும் இறங்கும் இடத்தை குறிப்பிட்டு டிஜிட்டல் முறையில் டிக்கெட் பெற்று கொள்ளலாம். சில்லறை தேட வேண்டிய அவசியம் இல்லை. அதே போல மெட்ரோவில் பயணம் செய்வதற்கு வரிசையில் நின்று இருந்து மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையில்லை . இந்த செயலிலேயே டிக்கெட் புக் செய்தால் கியூ ஆர் கோடு வந்துவிடும்.

பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சென்னை ஒன் செயலிக்கு நகரவாசிகள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. லட்சக்கணக்கானவர்கள் அன்றாடம் சென்னை ஒன் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் மேற்கொண்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த சென்னை ஒன் செயலியில் பல்வேறு சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் இருக்கின்றன .
சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகம் 1 ரூபாயில் பயணம் என்ற ஒரு புதிய சலுகையை பயணிகளுக்கு அறிவித்திருக்கிறது. இதன்படி பணமில்லா பரிவர்த்தனையின் கீழ் அரசின் பொது போக்குவரத்து பயணங்களை பயணிகள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகை நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அதாவது 1 ரூபாய் டிக்கெட்டில் மெட்ரோ அல்லது பேருந்து அல்லது மின்சார ரயிலில் பயணம் செய்யலாம். இந்த ஒரு ரூபாய் கட்டணத்தை யுபிஐ செயலிகள் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . பீம் யுபிஐ அல்லது நவி யுபிஐ செயலிகள் வாயிலாக சென்னை ஒன் செயலியில் டிக்கெட் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். அதில் உங்களின் முதல் பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் எவ்வளவாக இருந்தாலும் நீங்கள் 1 ரூபாயை மட்டும் செலுத்தினாலே போதும்.
இந்த சிறப்பு சலுகை ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும் தான் கிடைக்கும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும் .இது ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கு பொருந்தாது. பேருந்து மெட்ரோ மற்றும் மின்சார ரயில் பயணங்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது வரை சென்னை ஒன் செயலியை 5.5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர் 8 லட்சம் டிக்கெட்டுகள் இந்த செயலி வாயிலாக வாங்கப்பட்டிருக்கின்றன. ஒரே நகரம் ஒரே செயலி ஒரே டிக்கெட் என்ற இலக்கின் கீழ் இந்த ஒரு ரூபாய் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் இதன் மூலம் இந்த செயலியின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications